உயிரை கையில் பிடித்து தப்பிச் சென்ற விஏஓ… அரசு வெளியிட்ட அறிவிப்பு : கிராம நிர்வாக அதிகாரிகள் ஷாக்!!!

Author: Udayachandran RadhaKrishnan
6 May 2023, 7:22 pm
VAO - Updatenews360
Quick Share

தூத்துக்குடி மாவட்டத்தில் கிராம நிர்வாக அதிகாரி லூர்து பிரான்சிஸ் அவரது அலுவலகத்தில் பட்டப் பகலில் கனிம வளம் கும்பலால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதே போல் ஓமலூரில் கனிமவள கொள்ளையை தடுக்க சென்ற கிராம நிர்வாக அதிகாரியை கொலை செய்யும் முயற்சி நடந்தது. இந்த சம்பங்களை தொடர்ந்து தர்மபுரி மாவட்டத்திலும் கனிம வள கொள்ளையை தடுக்கு முயற்சித்த கிராம நிர்வாக அதிகாரியை நள்ளிரவில் கொல்ல முயற்சித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் மெணசி கிராம நிர்வாக அலுலவலர் இளங்கோ கடந்த 1 ம்- தேதி நள்ளிரவு மெணசி பகுதியில் கனிமவளக் கொள்ளை திருடப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் கனிம வளக் கொள்ளை கும்பலை கையும் காலமாக பிடிப்பதற்காக சம்பவ இடத்திற்கு தனது இரு சக்கர வாகனத்தில் விரைந்தார்.

அப்போது குண்டல்மடுவு காளியம்மன் கோவில் அருகில் உளி கற்களை ஏற்றிக்கொண்டு டிராக்டர் ஒன்று அதிவேகமாக சென்றது, அவற்றை தடுத்து நடவடிக்கை எடுப்பதற்கு கிராம நிர்வாக அதிகாரி முயற்சித்த போது, அந்த டிராக்டர் நிற்காமல் இவர் மீது ஏற்றிக் கொள்ளும் வகையில் வேகமாகச் சென்றது .

அதிர்ச்சியடைந்த இவர் அதிர்ஷ்டவசமாக வாகனத்தில் சிக்காமல் ஓடி உயிர் தப்பித்துள்ளார், பின்னர் அந்த வாகனம் யாருடையது என்பது குறித்து ஆய்வு செய்த பின்னர், மெணசி பகுதியை சார்ந்த ராகவன் அப்பா பெயர் முனுசாமி என்றும் டிராக்டர் எண் TN 29 டி TZ 2538 எனவும் தெரியவந்தது.

இதன் பின்னர் கிராமநிர்வாக அலுவலர் இளங்கோ தாசில்தாரிடம் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த நிலையில் கனிமவள கொள்ளை கும்பலால் கிராம நிர்வாகி இளங்கோவின் உயிருக்கு ஏதேனும் ஆபத்து வரலாம் என கருதி அப்பகுதி பொதுமக்கள் மற்றும் அப்பகுதி ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் தலைவர் ஆகியோர் கிராம நிர்வாக அதிகாரி இளங்கோவை பணியிட மாற்றம் செய்யக்கோரி அரூர் ஆர்டிஓ விடம் கோரிக்கை வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் மெணசி பகுதியில் இளங்கோ பணிபுரிய ஓராண்டு இருக்கும் நிலையில் தற்போது அவர் பொம்மிடி அருகே உள்ள மோட்டாங்குறிச்சி பகுதி கிராம நிர்வாக அதிகாரியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தற்போது மெணசி கிராம நிர்வாக அதிகாரியாக மோட்டாங்குறிச்சி கிராமத்தில் பணிபுரிந்த கற்பகம் பணியமர்த்த பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கனிம வள கொள்ளை கும்பலை பற்றி புகார் அளித்த கிராம நிர்வாக அதிகாரி இளங்கோ அதிரடியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டிருப்பது கிராம நிர்வாக அதிகாரிகளிடையே பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது

தூத்துக்குடி மாவட்டத்தில் கிராம நிர்வாக அதிகாரி லூர்து பிரான்சிஸ் அவரது அலுவலகத்தில் பட்டப் பகலில் கனிம வளம் கும்பலால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதே போல் ஓமலூரில் கனிமவள கொள்ளையை தடுக்க சென்ற கிராம நிர்வாக அதிகாரியை கொலை செய்யும் முயற்சி நடந்தது. இந்த சம்பங்களை தொடர்ந்து
தர்மபுரி மாவட்டத்திலும் கனிம வள கொள்ளையை தடுக்கு முயற்சித்த கிராம நிர்வாக அதிகாரியை நள்ளிரவில் கொல்ல முயற்சித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில்

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் மெணசி கிராம நிர்வாக அலுலவலர் இளங்கோ கடந்த 1 ம்- தேதி நள்ளிரவு மெணசி பகுதியில் கனிமவளக் கொள்ளை திருடப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது அதன்பேரில் கனிம வளக் கொள்ளை கும்பலை கையும் காலமாக பிடிப்பதற்காக சம்பவ இடத்திற்கு தனது இரு சக்கர வாகனத்தில் விரைந்தார்.

அப்போது குண்டல்மடுவு காளியம்மன் கோவில் அருகில் உளி கற்களை ஏற்றிக்கொண்டு டிராக்டர் ஒன்று அதிவேகமாக சென்றது, அவற்றை தடுத்து நடவடிக்கை எடுப்பதற்கு கிராம நிர்வாக அதிகாரி முயற்சித்த போது, அந்த டிராக்டர் நிற்காமல் இவர் மீது ஏற்றிக் கொள்ளும் வகையில் வேகமாகச் சென்றது

அதிர்ச்சியடைந்த இவர் அதிர்ஷ்டவசமாக வாகனத்தில் சிக்காமல் ஓடி உயிர் தப்பித்துள்ளார், பின்னர் அந்த வாகனம் யாருடையது என்பது குறித்து ஆய்வு செய்த பின்னர் மெணசி பகுதியை சார்ந்த ராகவன் அப்பா பெயர் முனுசாமி என்றும் டிராக்டர் எண் TN 29 டி TZ 2538 எனவும் தெரியவந்தது. இதன் பின்னர் கிராமநிர்வாக அலுவலர் இளங்கோ தாசில்தாரிடம் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார்

இந்த நிலையில் கனிமவள கொள்ளை கும்பலால் கிராம நிர்வாகி இளங்கோவின் உயிருக்கு ஏதேனும் ஆபத்து வரலாம் என கருதி அப்பகுதி பொதுமக்கள் மற்றும் அப்பகுதி ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் தலைவர் ஆகியோர் கிராம நிர்வாக அதிகாரி இளங்கோவை பணியிட மாற்றம் செய்யக்கோரி அரூர் ஆர்டிஓ விடம் கோரிக்கை வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் மெணசி பகுதியில் இளங்கோ பணிபுரிய ஓராண்டு இருக்கும் நிலையில் தற்போது அவர் பொம்மிடி அருகே உள்ள மோட்டாங்குறிச்சி பகுதி கிராம நிர்வாக அதிகாரியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்

தற்போது மெணசி கிராம நிர்வாக அதிகாரியாக மோட்டாங்குறிச்சி கிராமத்தில் பணிபுரிந்த கற்பகம் பணியமர்த்த பட்டுள்ளதாக கூறப்படுகிறது

கனிம வள கொள்ளை கும்பலை பற்றி புகார் அளித்த கிராம நிர்வாக அதிகாரி இளங்கோ அதிரடியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டிருப்பது கிராம நிர்வாக அதிகாரிகளிடையே பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது

Views: - 402

0

0