அரசு மற்றும் அரசியல் கட்சிகளின் ஆதரவோடு கனிமவளக் கொள்ளை? போஸ்டர்களை கிழித்த போலீஸ்… கோவையில் பரபரப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
6 May 2023, 6:51 pm
Cbe Natural Sources - Udpatenews360
Quick Share

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட அனுமதி பெற்ற மற்றும் சட்ட விரோத கல் குவாரிகளில் இருந்து தினமும் கேரளாவுக்கு பல்லாயிரம் லோடுகள் கனிம வளம் கடத்தப்படுகிறது.

இதை தடுத்து நிறுத்த கோரி விவசாயிகள் சூழல் ஆர்வலர்கள் மாவட்ட ஆட்சியரிடம் தொடர்ந்து புகார் அளித்து வருகின்றனர்.ஆனால் வருவாய்த்துறை, கனிமவளத்துறை, காவல்துறை என அனைத்து துறை அதிகாரிகளும் அளவின்றி கிடைக்கும் மாமுல் காரணமாகவும் ஆளுங்கட்சியின் ஆதரவுடன் இவை நடத்தப்பட்டாலும், கனிமவள கொள்ளைக்கு ஆதரவு அளித்து வருவதாக புகார் கூறுகின்றனர்.

இந்நிலையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் என்ற அரசியல் சாராத அமைப்பின் சார்பில் கனி மவளக் கொள்ளையை தடுத்து நிறுத்த கோரி மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரத்தை துவக்க திட்டமிட்டு உள்ளது.

கடந்த ஏப்ரல்”30 ஆம் தேதி இதை நடத்த திட்டமிட்டு இதற்கான வாகன அனுமதிக்கு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கடந்த ஏப்ரல் 25 ஆம் தேதி மனு கொடுத்து உள்ளனர்.

இரண்டு நாட்கள் கழித்துச் சென்று கேட்ட போது இதற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பம் கொடுங்கள் என்றும் திருப்பி கொடுத்து உள்ளனர்.

அங்கு சென்ற போது இதை இங்கே தர வேண்டாம் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அனுமதி பெற்றால் போதும் என்றும் டி.ஆர்.ஓ தெரிவித்து உள்ளதாகவும், மேலும் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கேட்ட போது எங்களுக்கு அந்த விண்ணப்பம் வரவில்லை என்றும் கூறி உள்ளனர்.

மீண்டும் டி.ஆர்.ஓ”விடம் சென்று கேட்டபோது அங்கிருந்து தபால் அனுப்பி விபரங்களை காண்பித்து உள்ளனர்.டி.ஆர்.ஓ அலுவலகத்தில் இருந்து காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு தொலைபேசி மூலம் தபால் சென்று இருப்பதை உறுதி செய்து உள்ளனர்.

அதற்கு பின்பு விண்ணப்பம் வந்ததை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக அதிகாரிகள் ஒப்புக் கொண்டு உள்ளனர். கடைசி வரை ஏப்ரல் 30 பிரச்சாரத்தை துவக்க அனுமதி கிடைக்கவில்லை,

அதனால் மே”8 ஆம் தேதி பிரச்சாரம் துவக்க திட்டமிட்டு அனுமதிக்காக காத்து இருக்கின்றனர். இப்பொழுது வரை அனுமதி தரப்படவில்லை. திட்டமிட்டு இந்த அமைப்பு சார்பில் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளது.

இந்த போஸ்டர்கள் ஒட்டப்படுவதை பார்த்த செட்டிபாளையம் காவல் துறையினர் ஒட்டிய தொழிலாளர்களின் மொபைல் ஃபோன்களை பறித்து மிரட்டி போஸ்டர்களை கிழிக்க வைத்து உள்ளனர் என தகவல் கூறப்படுகின்றது.

அந்த போஸ்டரில் கனிம வளங்களை பாதுகாக்க கோரி என்று தான் குறிப்பிடப்பட்டு இருந்தது அதையும் கட்டாயப்படுத்தி காவல்துறையினர் கிழிக்க வைத்ததில் இருந்து கனிமவள கொள்ளைக்கு காவல்துறை எவ்வளவு ஆதரவாக உள்ளனர் என அப்பகுதி பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் தகவல் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.

மேலும் குறிப்பாக ஒரு சாதாரண பிரச்சாரம் மேற்கொள்ளவும் போஸ்டர் ஒட்டவும் போலீசார் அனுமதி மறுக்கின்றனர். இதில் பெரிய அளவில் தொடர்புகள் இருப்பதை உறுதி செய்கின்றன என்றார்.

மொத்தத்தில் கனிமவளக் கொள்ளை அரசு மற்றும் அரசியல் கட்சியின் ஆதரவுடன் தான் நடக்கிறது என்பது தெளிவாக தெரிகிறது என்று தகவல் கூறியுள்ளார் அமைப்பின் தலைவர் ஈஸ்வரன் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 310

0

0