மாணவியை கிண்டல் செய்ததை தட்டிக் கேட்டவர்கள் மீது தாக்குதல் : பாதிக்கப்பட்டவர்கள் சாலை மறியல்.. தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு!!

Author: Babu Lakshmanan
31 January 2023, 9:42 am
Quick Share

மாணவியை கேலி, கிண்டல் செய்ததை தட்டிக்கேட்டவர்கள் மீது தாக்கியவர்களை கைது செய்யக்கோரி மறியல், மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூர் சந்தைமேடு பகுதியை சேர்ந்த 11-ம் வகுப்பு படிக்கும் மாணவியை அதே பகுதியில் ஸ்வீட் கடை நடத்தி வருவபவரின் மகன் சந்தோஷ் என்பவர் கேலி, கிண்டல் செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால், சந்தோஷை மாணவியின் உறவினர்கள் தட்டிக்கேட்டு தாக்கியுள்ளனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த சந்தோஷ் நேற்று கூட்டாளிகள் 10 பேருடன் சென்று மாணவியின் குடும்பத்தில் உள்ளவர்களை சரமாரியாக தாக்கியதில் 3 பெண்கள் உட்பட 8 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இது குறித்து வேப்பங்குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் இதுவரை யாரும் கைது செய்யப்படாததை கண்டித்தும், தாக்குதலில் ஈடுபட்டவர்களை கைது செய்ய கோரியும் ஒடுக்கத்தூர் பேருந்து நிலையத்தில் சுமார் 100க்கும் மேற்பட்டோர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் பெண் ஒருவர் மண்ணெண்ணெய் ஊற்றி தீ குளிக்க முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்தில் வேப்பங்குப்பம் காவல் துறை பேச்சுவார்த்தை நடத்தியும் மறியலை கைவிட மறுத்தனர். பின்னர் சம்பவ இடத்தில் வேலூர் DSP திருநாவுகரசு பேச்சுவார்த்தை நடத்தி இன்னும் 24 மணி நேரத்தில் சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்வதாக உறுதி அளித்ததை அடுத்து 3 மணி நேரத்துக்கு பிறகு மறியல் கைவிடப்பட்டது,

Views: - 438

0

0