வாத்தி கம்மிங்… வாத்தி கம்மிங்… ஸ்டெயிலாக முடி வெட்டி வந்த புள்ளிங்கோக்களுக்கு ஆப்பு… தலைமை ஆசிரியரின் அதிரடி செயல்…!!

Author: Babu Lakshmanan
28 June 2022, 10:56 am
Quick Share

வேலூர் : வேலூர் ஊரீசுப்பள்ளியில் தலைமுடியை ஸ்டைலாக வெட்டி வந்த புள்ளிங்கோக்களுக்கு தலைமுடியை சீர்திருத்தி ஆசிரியர்கள் அறிவுரை வழங்கினர்.

வேலூர் மாவட்டம் வேலூரில் உள்ள 160 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஊரீசுப் பள்ளியில் மாணவர்கள் பலரும் தலைமுடியை சரியாக வெட்டி வருவதில்லை என்ற புகார் இருந்து வருகிறது. இதனிடையே, ஒவ்வொரு பள்ளியிலும் மாணவர்கள் ஒழுக்கமாக சீருடை அணிந்து, தலைமுடி கத்தரித்திருக்க வேண்டுமென்று மாவட்ட ஆட்சியர் சுற்றறிக்கை வெளியிட்டார்.

இந்த நிலையில், ஊரிசுப்பள்ளியில் மாணவர்கள் பெரும்பாலானோர் தலைமுடியை சரியாக வெட்டாமல் பலர் புள்ளிங்கோ கட்டிங்க், ஸ்பைக் கட்டிக் என விதவிதமான ஸ்டைல்களில் முடியை வெட்டி வந்தனர். இதனால், பள்ளி ஆசிரியர்கள் ஆய்வு செய்ததில், 65 மாணவர்கள் அவ்வாறு தலைமுடியை சரியாக வெட்டாமல் வந்திருந்தனர்.

அவர்களை கண்டறிந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் எபினேசர் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களை எச்சரித்து அறிவுரை வழங்கியதுடன், தலைமை ஆசிரியர் எபினேசர் தனது சொந்த செலவில் முடிதிருத்துபவர்களை பள்ளிக்கு வரவழைத்து ஸ்டைலாக கட்டிங்களுடன் வந்த மாணவர்களின் தலைமுடியை சீர்திருத்தனர்.

பின்னர், பள்ளியின் தலைமை ஆசிரியர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “மாணவர்கள் தலைமுடியை சரியாக வெட்டாமல் வந்துள்ளனர். ஒழுக்கமாக மாணவர்கள் இருக்க வேண்டும். ஒழுங்காக தலைமுடியை வெட்ட வேண்டும் என அறிவுரையை வழங்கி மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி, அவர்களின் தலைமுடியை சீர்திருத்தினோம். இதுகுறித்து அவர்களின் பெற்றோர்களை வரவழைத்து அவர்களுக்கும் அறிவுரை வழங்கவுள்ளோம்,” எனக் கூறினார்.

Views: - 682

0

0