விஜய் பாணியில் விஷால்.. 2026 தேர்தலில் போட்டி : கூட்டணியா? தனிக்கட்சியா? வெளியான அறிவிப்பு!
Author: Udayachandran RadhaKrishnan14 April 2024, 4:37 pm
விஜய் பாணியில் விஷால்.. 2026 தேர்தலில் போட்டி : கூட்டணியா? தனிக்கட்சியா? வெளியான அறிவிப்பு!
2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகமும் போட்டியிட உள்ளது. லோக்சபா தேர்தல் முடிந்த பின்னர், கட்சியின் கொடி, பெயர், கோட்பாடுகளை அறிவிப்பேன் என்று கூறியதுடன், கைவசம் உள்ள படங்களை முடித்து தீவிர அரசியலில் இறங்குவேன் என்றும் விஜய் தெரிவித்திருந்தார்.
இதனால், தமிழக அரசியல் களம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், நடிகர் விஷால் தான் அரசியலுக்கு வருவது உறுதி என்று தெரிவித்துள்ளார்.
மேலும் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் கட்டாயம் நான் போட்டியிடுவேன் என்றும், தனிக்கட்சி தொடங்குவதா அல்லது கூட்டணி அமைத்து போட்டியா என்பது அப்போது முடிவு செய்யப்படும் என்று நடிகர் விஷால் கூறினார்.
சென்னை வடபழனியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த விஷால் கூறியதாவது:- 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற வேட்பாளர் பட்டியலில் என் பெயரும் இருக்கும். மக்களுக்கு போதுமான வசதி இல்லை. அதனால் தான் நான் அரசியலுக்கு வருகிறேன்.
ஏப்ரல் 19 ஆம் தேதி 100 சதவிகித வாக்குப்பதிவு நடைபெற்றது என்ற செய்தியை கேட்க விரும்புகிறேன். தனிக்கட்சி தொடங்குகிறேனா இல்லை புதிய கட்சி ஆரம்பிப்பதா என்பதை அப்போது முடிவு செய்வேன்” என்றார்.