தொண்டர்கள் கட்சிக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் : ஓ.பி.எஸ் பேச்சு!!

23 August 2020, 3:02 pm
OPS - Updatenews360
Quick Share

தேனி : பெரியகுளத்தில் நடந்த அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தொண்டர் கட்சிக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் அதிமுக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், பங்கேற்று பேசும்போது, கட்சிக்கு தொண்டர் விசுவாசமாக இருக்க வேண்டும் என்று கூறினார்.

ஒரு நாள் எனக்க விசுவாசமாக இருக்க வேண்டும் என எண்ணியதில்லை என கூறிய ஓ.பி.எஸ்,. கட்சிக்கு விசுவாசமாக உள்ளவர்களை பொறுப்பாளராக நியமிக்க வேண்டும் என்றார். அடுத்த இலக்கு 2021ஆம் ஆண்டு சட்மன்ற தேர்தலில் அதிமுகவை ஆட்சிக் கட்டிலில் அமர வைப்பதே என்பதை கொண்டு அனைவரும் பணியாற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

பல நூறாண்டு அதிமுக தொடர்ந்து இருக்கும் என்றும், நடந்தவை நடந்தவையாகவே இருக்கட்டும், இனி நடப்பவை நல்லவையாக நடக்கட்டும் என்று அதிமுக நிர்வாகிகள் மத்தியில் பேசினார்.

Views: - 29

0

0