அவதூறு கருத்துகளை கூறிய ஸ்டாலின் மீது சட்டரீதியான வழக்கு தொடர்வோம் : அமைச்சர் விஜயபாஸ்கர்….

10 November 2020, 12:11 pm
Vijayabhaskar - Updatenews360
Quick Share

திருச்சி : அமைச்சர் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி அரசியல் ஆதாயம் தேடும் ஸ்டாலின் மீது சட்டரீதியான வழக்கு தொடருவோம் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சிக்கு வந்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, இரண்டாம் லாக் டவுன் வந்து இருக்கக்கூடிய நிலையில், தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாட்டில் உள்ளது, உலக நாடுகளையே உற்று நோக்க வைத்திருக்கிறது என்று கூறினார்.

10சதவீத படுக்கைகளில் மட்டுமே நோயாளிகள் உள்ளனர். அமைச்சர் துரைக்கண்ணு இழப்பு மிகுந்த வருத்தம் அளிக்கிறது. ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அமைச்சர் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி அரசியல் ஆதாயம் தேடுவது ஏற்புடையதாக இல்லை என்றார்.

இந்த அநாகரீக பேச்சு வருத்தத்தை அளிப்பதோடு, எந்த விதத்திலும் நியாயமில்லை. எதிர்க்கட்சித் தலைவர் வார்த்தைகளை கவனமாக கையாளவேண்டும். இது குறித்து அவர் மீது சட்டரீதியாக வழக்கு தொடரப்படும் என்று கூறினார்.

மருத்துவ செவிலியர்கள் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என்ற அமைச்சர், 7.5சதவீத இட ஒதுக்கீட்டிற்கும், ஸ்டாலினுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. யார் பெற்ற பிள்ளைக்கு யார் பெயர் வைப்பது என தெரியவில்லை என கூறினார். அப்போது அமைச்சர் விஜயபாஸ்கருடன் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி உடனிருந்தார்.

Views: - 17

0

0