இதென்ன உங்க அப்பன் வீட்டு பேருந்தா? அரசு பஸ்ஸில் அரசியல் STICKER.. ஓட்டுநர் மண்டையை உடைத்த BJP பிரமுகர்!

Author: Udayachandran RadhaKrishnan
13 April 2024, 2:47 pm
BJP Crime
Quick Share

இதென்ன உங்க அப்பன் வீட்டு பேருந்தா? அரசு பஸ்ஸில் அரசியல் STICKER.. ஓட்டுநர் மண்டையை உடைத்த BJP பிரமுகர்!

நெல்லை மேலப்பாளையம் குறிச்சி பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவர் அரசு பேருந்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்றிரவு நெல்லை டவுனில் இருந்து மண்ணப்படைவீடு செல்லும் அரசு பேருந்தில் நடந்துனர் பாஸ்கருடன் பணியில் இருந்தார்.

அப்போது திம்மராஜபுரம் பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை ஏற்றி கொண்டிருந்த போது அந்த பகுதியை சேர்ந்த பாஜக பிரமுகர் மருதுபாண்டி என்பவர் தாமரை சின்னம் பொறித்த போஸ்டரை பேருந்தில் ஒட்டிவிட்டுள்ளார்.

பின்னர் முன்பக்க கண்ணாடியிலும் ஒட்ட முயன்றுள்ளார். இதைப் பார்த்த நடத்துநர் பாஸ்கர், அரசு பேருந்தில் அரசியல் போஸ்டர் ஒட்டக்கூடாது என தடுத்துள்ளார்.

ஆனால் மருதுபாண்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், இது உங்க அப்பன் வீட்டு பஸ்ஸா என கேட்டு அவதூறாக நடத்துனரை திட்டியுள்ளார். உடனே கொந்தளித்த ஓட்டுநர் சுப்பிரமணியன், மருதுபாண்டியை சத்தம் போட்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த மருதுபாண்டி, சோடா பாட்டியை எடுத்து ஓட்டுநர் சுப்பிரமணியனை தாக்கி விட்டு தப்பியோடினார். இதில் காயமடைந்த ஓட்டுநர் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்ப்டடார்.

இதையடுத்து அவர் அளித்த புகாரின் பேரில் பாளையங்கோட்டை போலீசார் மருதுபாண்டி மீது கொலை முயற்சி, அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுப்பது உட்பட 5 பிரிவுகளில் கீழ் வழக்குப்பதிவு செய்து மருதுபாண்டியை கைது செய்தனர்.

Views: - 114

0

0