ஓபிஎஸ் மன்னிப்பு கேட்டால் இபிஎஸ் ஏற்றுக்கொள்வாரா? செய்தியாளர்கள் கேள்விக்கு அதிமுக எம்எல்ஏ பரபரப்பு பதில்!!

Author: Udayachandran RadhaKrishnan
12 July 2023, 4:54 pm
Rajan Chellappa - Updatenews360
Quick Share

மதுரை திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட திருநகர் பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் நிதியின் கீழ் 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக ஆர்.ஒ பிளானட் சுத்திகரிப்பு குடிநீர் நிலைய புதிய கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது.

இதில் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் வக்கீல் ரமேஷ் நிலையூர் முருகன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர் இதனை திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா திறந்து வைத்தார் இதனைத் தொடர்ந்து செய்தியாளர் சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில் கழகப் பொதுச் செயலாளராக தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது என்ற கேள்விக்கு தேர்தல் ஆணையம் அறிவித்த அறிவிப்பு ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டது தான் ஏனென்றால் சட்டமன்ற உறுப்பினர்கள் பொதுக்குழு உறுப்பினர்கள் செயற்குழு உறுப்பினர்கள் மக்கள் ஆதரவு அத்தனையுமே அண்ணா திமுக.

எடப்பாடி பழனிச்சாமிக்கு ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்டு வழங்கப்பட்டிருக்கிறது. தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கப்பட்டு இணையத்தில் வெளியிட்டதில் எங்களுக்கு மகிழ்ச்சி தமிழக மக்களுக்கு வழி காட்டுற வாய்ப்பாக எங்களுக்கு கிடைத்துள்ளது.

அதிமுகவில் இருந்து விலகி சென்றவர்கள் மீண்டும் வந்து கடிதம் கொடுத்தால் சேர்த்துக் கொள்வீர்களா என்ற கேள்விக்கு கடிதம் கொடுத்தால் சேர்த்துக் கொள்ளப்படும் என்பது அண்ணா திமுகவின் நடைமுறை மன்னிப்பு கடிதம் கொடுத்தால் இயக்கத்தில் தொண்டராக சேர்த்துக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது.

பொதுச் செயலாளர் மன்னிப்பு கடிதம் கொடுக்க வேண்டும் தோல்வி மீது தோல்வியை சந்தித்துக் கொண்டிருக்கிறவர்கள் போராடி போராடி தோல்வியை சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஓபிஎஸ் மற்றும் வைத்தியலிங்கம் அவர்களுக்காக மறைமுகமாக மன்னிப்பு கடிதம் கொடுத்துவிட்டு அண்ணா திமுகவில் மறைமுகமாக அழைப்பாக இருக்கலாம் என்று நான் சந்தேகிக்கிறேன்

ஓபிஎஸ் மீண்டும் வந்தால் சேர்த்துக் கொள்வார்களா என்ற கேள்விக்கு ஓபிஎஸ் தன் தவறை உணர்ந்து பொதுச் செயலாளரிடம் மன்னிப்பு கடிதம் கொடுத்தால் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஏற்றுக் கொள்வார் என்று நம்புகிறேன்.

ஆகஸ்ட் 1ஆம் தேதி கோடநாடு கொலை வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என்று தமிழ்நாடு முழுவதும் ஓபிஎஸ் ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளார் குறித்த கேள்விக்கு, சந்தோசமாக அறிவிக்கட்டும் மக்கள் பிரச்சினைகள் எவ்வளவோ இருக்கு தக்காளி விலையிலிருந்து இஞ்சி விலை வரை ஏறிக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட குற்றவாளிகளை அடையாளம் காட்ட எடப்பாடி யாரால் அடையாளம் காட்டப்பட்டு நீதிமன்றத்தில் சமர்ப்பணம் செய்யப்பட்டது. மீண்டும் அதனை மீண்டும் அதனை சொல்லி ஏதோ ஒரு குறுகிய நோக்கத்தோடு யாருடைய பேராவது அவபேர் ஏற்படுத்தும் வகையில் முயற்சிக்கிறார்கள் எந்த முயற்சி எடுத்தாலும் அவை தோற்றுப் போகும். அவர்கள் எடுக்கும் முயற்சி நல்ல காரணத்திற்காக போராட வேண்டும் மக்கள் பிரச்சினைக்காக போராட வேண்டும் உண்மைக்காக போராட வேண்டும் குறுகிய நோக்கத்தில் தங்களுடைய சுயநலத்திற்காக போராடினால் அவை மக்கள் மத்தியில் எடுபடாது.

தொடர்ந்து இது மாதிரியான போராட்டங்கள் புதிதாக ஆரம்பித்து பார்க்கிறார்கள் தனது தொண்டர்களை தன்னை நம்பி இருக்கிறவர்களை நிலை நிறுத்தும் வகையில் நினைக்கிறார் தேவையில்லாத ஒன்று ஏற்கனவே குற்றவாளிகள் அடையாளம் காட்டப்பட்டு விட்டார்கள் அதற்கு திமுக வழக்கறிஞர்கள் ஜாமீன் எடுத்த வரலாறு உள்ளது இது தேவையில்லாத ஒன்று இதனால் எங்களுக்கு ஒரு பிரச்சனையும் இல்லை.

திமுக எதிர்க்கட்சியாக இருக்கும் பொழுது ஆட்சிக்கு வந்தால் மதுபானத்தை ஒழிப்போம் என்று வாக்குறுதி கொடுத்தார்கள் ஆனால் தற்போது கட்டிட தொழிலாளர்களுக்காக 7 8 மணிக்கு எல்லாம் மது விற்கப்படும் என மூத்த அமைச்சர் கூறியுள்ளார் என்ற கேள்விக்கு திராவிட முன்னேற்ற கழகம் தேர்தல் அறிக்கையின் சரி பிரச்சார கூட்டங்களிலும் சரி முரண்பாடாக தான் நடந்து கொண்டிருக்கிறது. தவிர எதுவுமே சரியாக இது வரை நடக்கவில்லை.

இன்றைக்கு மது கடைகளை மூட வேண்டும் என்ற உணர்வோடு இருக்கும் பொழுது காலையில் பள்ளி மாணவர்கள் செல்லக்கூடிய நேரம் ஏழு முதல் ஒன்பது மணி என்பது பள்ளி மாணவ மாணவிகள் செல்லக்கூடிய நேரத்தில் மது கடைகளை திறக்க வேண்டும் என்று கோரிக்கைகளை பரிசீலனை செய்வதை தவறு யாராவது கோரிக்கை கொடுத்தார்களா அந்த கோரிக்கைகளை பரிசீலனை செய்கிறோம் என்றாலே மிகப்பெரிய தவறு இது போன்ற செயல்களை திமுக கையாளுமானால் ஏற்கனவே தோல்வி அடைந்து கொண்டிருக்கிறது வீழ்ந்து கொண்டிருக்கிறது.

மக்கள் பிரச்சனைகளை அவர்களால் தீர்க்க முடியவில்லை மகளிர் உதவித்தொகையை முறையாக கையாள போவதில்லை நடைமுறையில் தெரிந்து விட்டது. பொருளாதாரத்தை மிச்சம் பண்ணுவதற்காகவே செய்கிறார்கள்.எந்த திட்டத்தை முறைப்படி நிர்வாக ரீதியாக செய்யவில்லை நிர்வாக திமுக நிர்வாக ரீதியாக தோல்வி அடைந்திருக்கிறது அரசு அலுவலர்களை சரியாக பயன்படுத்தவில்லை காவல்துறையை சரியா பயன்படுத்த முடியவில்லை.

குட்கா மற்றும் போதை பொருட்களை தமிழ்நாட்டில் விற்கப் போவதாக அறிவித்துள்ளார்கள் இதுகுறித்த கேள்விக்கு, கண்டிப்பாக குட்கா என்பது அனைவரும் பயன்படுத்திமாணவர்கள் போதை பொருட்களை பழகிவிடக்கூடாது என்பதற்காக தான் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகிறோம்.

அத்தனை ஆலோசனை முடித்துவிட்டு மாணவர்கள் இளைஞர்களை கெடுக்கிற முயற்சி முயற்சிலேயே திராவிட முன்னேற்ற கழகம் ஈடுபட்டு வருகிறது. மூத்த அமைச்சர் என்று பெயர் பெற்றவர் இன்று அவர் பெயருக்கு ஆளாகும் இல்லையே திமுக அரசு அவரை தள்ளி இருக்கிறது.

இது குறித்து அதிமுகவின் சார்பாக எதுவும் ஆர்ப்பாட்டம் ஏதும் நடைபெற உள்ளதா குறித்த கேள்விக்கு, நாங்கள் மொத்தமாகவே மது கடையை மூட வேண்டும் என்றுதான் போராட போகிறோம். எங்களின் நோக்கம் அது விளக்கு தான்.

பத்திரப்பதிவில் சேவை கட்டணம் எல்லாம் உயர்வாக இருக்கிறது இதுகுறித்து அதிமுக தலைவர் எந்த ஒரு கண்டனமும் இன்னும் தெரிவிக்கப்படவில்லை என்பது குறித்த கேள்விக்கு

ஒட்டுமொத்தமாகவே திமுக அரசின் விலைவாசியை எதிர்த்து போராடிக் கொண்டிருக்கிறோம். திமுக செய்வது அத்தனையும் தவறு,மிகப்பெரிய போராட்டத்தின் மூலம் இந்த அரசை வீழ்த்துகிற அளவில் அதிமுக செயல்படும்.

மன்னிப்பு கடிதம் கொடுத்தால் அதிமுகவை எதிர்த்த யாராக இருந்தாலும்கட்சி உறுப்பினராக சேர்த்துக்கொள்ளப்படும் என்று இபிஎஸ் இன் அறிக்கை குறித்த கேள்விக்கு

யாரை ஏற்றுக்கொள்ள வேண்டும் யாரை ஏற்றுக்கொள்ளக்கூடாது என்று பொதுச் செயலாளருக்கு தெரியும். மீண்டும் துரோகம் செய்தால் கண்டிப்பாக இபிஎஸ் பொறுமையாக இருக்க மாட்டார். ஓபிஎஸ் மற்றும் வைத்திலிங்கம் தவறை வந்தால் சேர்த்துக் கொள்ளலாம். திமுக அரசே வீழ்த்துகிறது தான் அதிமுகவின் கடமை என்று தெரிவித்தார்.

Views: - 265

0

0