நழுவிய செல்போனை பிடிக்க முயற்சித்த பெண்: தவறி விழுந்து உயிரிழந்த சோகம்…!!

30 October 2020, 5:57 pm
death - updtanews360
Quick Share

அயனாவரம் அருகே கையில் வைத்திருந்த செல்போன் நழுவியதால், அதை பிடிக்க முயற்சித்த பெண் 4வது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார்.

சென்னை: அயனாவரம் அருகே நம்மாழ்வார்பேட்டையை சேர்ந்தவர் யாமினி. இவர் கடந்த 25ம் தேதி 4வது மாடியில் உள்ள தனது வீட்டின் பால்கனியில் நின்றிருந்தார்.

அப்போது, அவர் கையில் வைத்திருந்த செல்போன் நழுவியதால் தாவி பிடிக்க முயன்று, மாடியில் இருந்து தவறி விழுந்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

அதனைதொடர்ந்து, கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த யாமினி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.