திருமண ஆசை காட்டி இளம் பாலியல் உல்லாசம்… கர்ப்பமானதும் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்த நபர் ; நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு

Author: Babu Lakshmanan
1 December 2022, 8:58 am
Quick Share

தூத்துக்குடி: திருமண ஆசை காட்டி அடிக்கடி பாலியல் உல்லாசம் அனுபவித்து விட்டு, கர்ப்பம் ஆனதால் திருமணம் செய்ய மறுத்தவருக்கு மகிளா நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்தது.

தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் தாலுகாவிலுள்ள மாவில்பட்டி என்ற பகுதியை சேர்ந்தவர் மாரீஸ்வரி. இவர் சாத்தூரில் தையல் கற்று கொள்ள சென்றபோது, அதே பகுதியை சேர்ந்த அழகுராஜ் என்பவர் பழக்கமாகி உள்ளார். அழகுராஜ் விளாத்திகுளத்தில் உள்ள ஒரு தனியார் வெள்ளரிக்காய் பதப்படுத்தும் கம்பெனியில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில், மாரீஸ்வரியுடன் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியதால், அவரையும் தான் வேலை பார்க்கும் வெள்ளரிக்காய் பதப்படுத்தும் கம்பெனியில் வேலைக்கு சேர்த்து விட்டுள்ளார். தொடர்ந்து, மாரீஸ்வரியை திருமணம் செய்து கொள்வதாக கூறிய அழகுராஜ், அவரது வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார்.

வீட்டில் தனிமையாக இருந்த மாரீஸ்வரியிடம் திருமண ஆசை கூறி அடிக்கடி பாலியல் உறவு வைத்துக் கொண்டுள்ளார். இதனால், மாரீஸ்வரி கர்ப்பமாகி உள்ளார். அதனை தொடர்ந்து, அழகுராஜை திருமணம் செய்து கொள்ளுமாறு மாரீஸ்வரி வற்புறுத்தியுள்ளார். ஆனால் அழகுராஜ் மாரீஸ்வரியை திருமணம் செய்யாமல் தட்டிக் கழித்து வந்துள்ளார்.

அதனை தொடர்ந்து மாரிஸ்வரி விளாத்திகுளம் மகளிர் காவல் நிலையத்தில் அழகுராஜ் மீது கடந்த 2015ம் ஆண்டு புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் அழகுராஜ் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கு தூத்துக்குடி மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கினை அரசு வழக்கறிஞர் எல்லம்மாள் ஆஜராகி வாதாடி வந்தார். இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி மாதவராமனுஜம், குற்றவாளி அழகுராஜ்க்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், 3 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார். இதை கட்ட தவறினால் கூடுதலாக 1 ஆயிரம் அபராதம் 3 மாத கடுங்காவல் தண்டனையும் வழங்கி தீர்ப்பளித்தார்.

இதற்கிடையில், அழகுராஜ் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து அவர்களுக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர் என்பதும் குறிப்பிடதக்கது.

Views: - 282

0

0