பிரபல நடிகர் கட்டிய தாலியை 6 மாதம் ரகசியமாக மறைத்து வைத்த பிரபல நடிகை : அந்த காலத்துலயே இப்படியா?

Author: Udayachandran RadhaKrishnan
30 November 2022, 4:41 pm
Taali - Updatenews360
Quick Share

சி னிமாவில் உணர்ச்சி பூர்வமான நடிப்பை வெளிப்படுத்தி தனக்கென ஒரு அங்கீகாரத்தை ஏற்படுத்தியள்ள நடிகர்கள் சிலரே.

அதில் குறிப்பிட்ட சொல்ல வேண்டுமென்றால்நடிகர் சிவாஜி கணேசன்.
எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதற்கு ஏற்றார் போல் தன்னுடைய நடிப்பை வெளிக்காட்டி அசத்துவார்.

இவரை சக நடிகர் மட்டும் நடிகைகளுக்கு எல்லோருக்கும் பிடிக்கும். நடிகர் சிவாஜி எத்தனையோ நடிகைகளுடன் ஜோ டி சேர்ந்து நடித்திருந்தாலும் நடிகை பத்மினியுடன் இவர் அதிகமான திரைப்படங்கள் நடித்துள்ளார்.

நடிகர் சிவாஜியுடன் இணைந்து தில்லானா மோகனாம்பாள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட படங்களில் சேர்ந்து நடித்துள்ளார்கள். இந்த ஜோடி ரசிகர்கள் மத்தியில் வெகுவாக கவர்ந்தது.

அந்த சமயத்தில் இருவருக்குமிடையே காதல் என்றெல்லாம் தகவல் வெளியானது. ஆனால் அவர்கள் அதை மறுத்தனர். இந்த நிலையில் அவர்களை பற்றிய தகவல் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

ஒரு சமயத்தில் படத்திற்காக இணைந்து நடித்த போது, நடிகை பத்மினிக்கு தாலி கட்டுவது போன்ற காட்சி இருந்துள்ளது. அப்போது சிவாஜி அவர்கள் பத்மினிக்கு தாலி கட்டியுள்ளார்.

ஆனால் நிஜமான சம்பவமாக நினைத்து தாலியை யாருக்கும் தெரியாமல் கிட்டத்தட்ட 6 மாதமாக ரகசியமாக கழுத்தில் வைத்து வந்துள்ளார் நடிகை பத்மினி.

இதை பத்மினியின் தங்கை பார்த்து, பெற்றோரிடம் சொல்லியிருக்கிறார். பின்னர் பத்மினியின் தாயார், நிஜவாழ்க்கை வேறு சினிமா வேறு என புரியவைத்து, தாலியை கழட்ட வைத்துள்ளார்.

நடிகை பத்மினிக்கு 1961ஆம் ஆண்டு திருமணம் ஆகி அமெரிக்காவில் கணவருடன் செட்டில் ஆனார். அமெரிக்காவில் நடனப்பள்ளி ஆரம்பித்து பிரபலமாக வலம் வந்தது குறிப்பிடத்தக்கது.

Views: - 631

10

2