திருப்பூரில் தலை துண்டித்து இளைஞர் கொலை: தலையை தேடும் பணி தீவிரம் !!

Author: kavin kumar
14 February 2022, 8:36 pm
Quick Share

திருப்பூர் : திருப்பூரில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலமாக உடல் மட்டும் மீட்கப்பட்டுள்ளது. தலையினை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

திருப்பூர் செங்காடு காட்டுப்பகுதியில் இருந்து இரவு ரத்த காயங்களுடன் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் குடியிருப்புப் பகுதிக்கு அருகில் வந்துள்ளார். இதனை கண்ட அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக காவல் துறையினருக்கு தெரிவித்துள்ளனர் . சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் ரத்த காயங்களுடன் இருந்த நபரை ஆம்புலன்ஸ் உதவியுடன் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதே இடத்தில் தலையில்லாமல் உடல் மட்டும் கிடப்பதாக பொதுமக்கள் தெரிவித்ததையடுத்து உள்ளே சென்று பார்த்த போலீசார் தலை இல்லாமல் இருந்த உடலை ஆம்புலன்ஸ் உதவியுடன் பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தலை இல்லாமல் இருந்த நிலையில் காட்டுப்பகுதியில் தலை இருக்கிறதா என காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் மாநகரின் அனைத்து சோதனை சாவடிகளிலும் உஷார் படுத்தி கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர். சடலம் இருந்த பகுதியில் மது பாட்டில்கள் இருந்ததன் காரணமாக மதுபோதையில் ஏதேனும் தகராறு ஏற்பட்டு கொலை நடந்துள்ளதா என்பது குறித்தும் அல்லது வேறு ஏதேனும் காரணங்களால் கொலை செய்யப்பட்டதா , தலை எங்கே ? கொலையாளி யார் ? கொலை செய்யப்பட்டவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட இளைஞர் கும்பகோணத்தைச் சேர்ந்த சதீஷ் (24) என்பதும், படுகாயமடைந்த இளைஞர் திருச்சியைச் சேர்ந்த ரஞ்சித் (22) என்பதும், அப்பகுதியில் உள்ள நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் தெரிய வந்ததுள்ளது. மேலும் இருவரும் செரங்காடு பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் நேற்றிரவு மது அருந்திக் கொண்டிருந்தபோது அங்கு வந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல் இருவரையும் சுற்றிவளைத்து கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கி , இருவரிடம் இருந்த பணம், மொபைல் ஆகியவற்றையும் பறித்து சென்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனிடையே,கொலையாளிகளைப் பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. தலையில்லாமல் உடல் மட்டுமே மீட்கப்பபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 1167

0

0