மனு அளிக்க வந்த பெண்ணை தாக்கிய அமைச்சர்… 48 மணி நேரத்தில் பதவி விலக வேண்டும் : வீடியோ பதிவிட்டு எச்சரிக்கை விடுத்த அண்ணாமலை!!

Author: Udayachandran RadhaKrishnan
12 July 2022, 9:10 pm
KKSSR Attack - Updatenews360
Quick Share

10 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் ஆட்சியை பிடித்த திமுக அரசு அமைந்து ஒரு வருடம் நிறைவடைந்துள்ளது. இந்த ஒரு வருடத்தில் தமிழகத்தில் பல்வேறு குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

குறிப்பாக திமுக அமைச்சர்கள் மீது ஊழல் புகார்களை கூறி வருகிறார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. அவர் கூறும் புகார்களுக்கு அமைச்சர்கள் ஏனோ தானே என பதிலளித்து வந்ததையும் காண முடிந்தது.

இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம் பாலவனத்தம் கிராமத்தில் தீர்வு தேடி மனு அளிக்க வந்த ஏழைப் பெண்ணை அமைச்சர் கேகேஎஸ்எஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தாக்கியது போன்ற காட்சிகள் இணையத்தில வைரலாகி வருகிறது.

இந்த வீடியோ அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு, திமுகவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். மக்கள் என்ன உங்கள் அடிமைகளா? விருதுநகர்,பாலவனத்தம் கிராமத்தில் தீர்வு தேடி வந்த ஏழைத்தாயை அடித்த அமைச்சர் KKSSR ராமச்சந்திரன் அடுத்த 48 மணி நேரத்திற்குள் அமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும் அல்லது அவரது வீட்டை பாஜக முற்றுகையிடும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம் என பதிவிட்டுள்ளார்.

இதனால் திமுகவினரிடையே சலசலப்பு ஏற்பட்டுளள்து.

Views: - 426

1

0