வழக்கறிஞரின் உயிரை எடுத்த ட்ராக்டர் : சாண உரத்தை கொட்டும் போது பின்பக்க கதவால் ஏற்பட்ட விபரீத சம்பவம்!!

Author: Udayachandran RadhaKrishnan
30 September 2022, 2:07 pm
Tractor Dead - Updatenews360
Quick Share

கள்ளக்குறிச்சி : உளுந்தூர்பேட்டை அருகே டிராக்டர் ட்ரெய்லர் கதவு பிடித்து வழக்கறிஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது பிள்ளையார் குப்பம் கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் ஜெய்சங்கர் (வயது 30). இவர் உளுந்தூர்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ளார்.

இந்த நிலையில் இன்று காலை அவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் ஒரு டிராக்டரில் சாண எறு கொட்டியுள்ளார். அப்போது பின்னால் சென்று பார்த்த போது டிராக்டர் ட்ரெய்லரின் பின்பக்க கதவு ஜெய்சங்கர் தலையில் அடித்ததில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சென்ற திருநாவலூர் காவல் நிலைய போலீசார் சடலத்தை மீட்டு விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, விசாரணை செய்து வருகின்றனர்

Views: - 341

0

0