தந்தையை கொலை செய்ய முயன்ற மகனுக்கு காத்திருந்த ட்விஸ்ட் : கோர்ட்டு வாசலில் அரிவாளை பிடுங்கி மகனையே கொன்ற தந்தை!!

Author: Udayachandran RadhaKrishnan
21 June 2022, 2:41 pm
Dad MurderedSon - Updatenews360
Quick Share

தூத்துக்குடியில் சொத்து பிரச்சினை காரணமாக நீதிமன்றம் எதிரே மகனை வெட்டி கொலை செய்த தந்தையை போலீசார் கைது செய்தனர்.

சொத்து பிரச்சனை காரணமாக கவர்னகிரி சேர்ந்த காசிராஜன் வழக்கு விசாரணைக்கு தூத்துக்குடி நீதிமன்றத்திற்கு வந்த தனது தந்தை தமிழழகனை அரிவாளால் வெட்ட முயன்ற போது மகன் கையில் இருந்த அரிவாளை பிடுங்கி தந்தை தமிழழகனே மகன் காசிராஜனை வெட்டி கொலை செய்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் தமிழ் அழகனுக்கு பாதுகாப்பிற்காக உடன் வந்த அவரது சகோதரர் கடல் ராஜா மற்றும் சகோதரர் மகன் காசிதுரை ஆகிய இருவரும் பலத்த அரிவாள் வெட்டு காயங்களுடன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த கொலை குறித்து மத்திய பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Views: - 466

0

0