பழவேற்காட்டில் திடீரென நில அதிர்வு… பயங்கர வெடிசத்தமும் கேட்டதால் பொதுமக்கள் பீதி..!!

Author: Babu Lakshmanan
13 May 2022, 3:48 pm
Quick Share

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் திடீரென ஏற்பட்ட நில அதிர்வால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

திருவள்ளூர் மாவட்டம்,பழவேற்காடு பகுதியானது ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவினை ஒட்டிய பகுதியாகும். ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்படும் செயற்கைக்கோள்களை நேரடியாக பழவேற்காடு பகுதியில் இருந்து பொதுமக்களால் பார்க்கக்கூடிய அளவிற்கு மிக நெருங்கிய பகுதி ஆகும்.

இந்த நிலையில், திடீரென மிகப்பெரிய வெடி சத்தம் கேட்டது. விண்வெளிக்கு ராக்கெட் மூலம் செயற்கைக்கோள் ஏதேனும் அனுப்பப்பட்டுள்ளதா என பொதுமக்கள் குழந்தைகளுடன் ஆர்வமாக வானத்தைப் பார்த்தபடி நின்றனர்.

ஆனால் அங்கு வானத்தில் ராக்கெட் ஏவியதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை. மேலும் சாதாரணமாக ராக்கெட் ஏவப்படும்போது வரக்கூடிய சத்தத்தை விட பல மடங்கு அதிக சத்தம் உணரப்பட்டது.இதனால் லேசான நில அதிர்வு போன்ற அதிர்வினை பொதுமக்கள் உணர்ந்தனர்.

Views: - 466

0

0