கல்வி நிலையங்களில் குடிபுகுந்த கொரோனா : சென்னையைத் தொடர்ந்து தூத்துக்குடியில் மருத்துவ மாணவர்கள் 30 பேருக்கு தொற்று பாதிப்பு..!

Author: Babu Lakshmanan
25 June 2022, 5:02 pm
Corona Status - Updatenews360
Quick Share

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு கொரொனா பரிசோதனை மேற்கொண்டதில் 30 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அவர்கள் தனிமைபடுத்தப்பட்டனர்.

தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரியில் தமிழகம் முழுவதிலும் இருந்து பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் ஆண்டுக்கு சுமார் 750க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ள நிலையில், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இரண்டாம் கட்டமாக தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரியில் பயிலும் சுமார் 200 மாணவ, மாணவிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் சுமார் 30 மாணவ, மாணவிகளுக்கு தொற்று உறுதியானதை தொடர்ந்து, கல்லூரி விடுதியில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருவதாகவும் மருத்துவக் கல்லூரி சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 567

0

0