72வது குடியரசு தின விழா : 20 தமிழக காவலர்களுக்கு குடியரசு தலைவர் விருது அறிவிப்பு
25 January 2021, 7:39 pmசென்னை : சென்னை ஆணையர் மகேஷ்குமார் உள்பட 20 தமிழக காவலர்களுக்கு குடியரசு தலைவர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் நாட்டின் 72வது குடியரசு தினம் நாளை கொண்டாடப்பட இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில், காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
அதில், தமிழகத்தைச் சேர்ந்த சென்னை காவல் ஆணையர் மகேஷ் குமார், ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம், இன்ஸ்பெக்டர் மணிகண்ட பிரபு ஆகிய 3 பேருக்கு ஜனாதிபதியின் காவல் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. அன்பு உள்பட தமிழகத்தை சேர்ந்த 17 போலீசார் மற்றும் போலீஸ் அதிகாரிகளுக்கு இந்திய காவல் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
0
0