பல்கலை.,களில் பதவி உயர்வு பெற்றதில் முறைகேடு : விசாரணை குழு அமைத்து தமிழக அரசு உத்தரவு

9 July 2021, 11:02 am
periyar-university-salem - updatenews360
Quick Share

சேலம் பெரியார் உள்பட 3 பல்கலைக்கழகங்களில் பதவி உயர்வு வழங்கியதில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகார் குறித்து விசாரணை மேற்கொள்ள உயர்கல்வித்துறை துணை செயலாளர் சங்கீதா தலைமையில் குழு அமைத்து உத்தரவிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது :- சேலம்‌ பெரியார்‌ பல்கலைக்கழத்தில்‌ மேற்கொள்ளப்பட்ட பதவி உயர்வுகள்‌ உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள்‌ குறித்து நாளிதழ்களில்‌ செய்திகள்‌ வெளியாகியுள்ளன. மேலும்‌, மதுரை காமராசர்‌ பல்கலைக்கழகம்‌ மற்றும்‌ அண்ணாமாலைப்‌ பல்கலைக்கழகங்களில்‌ மேற்கொள்ளப்பட்ட ஆசிரியர்‌ பதவி உயர்வுகளில்‌ முறைகேடுகள்‌ நடைபெற்றுள்ளதாகவும்‌ புகார்‌ மனுக்கள்‌ அரசுக்கு
வந்துள்ளன.

இந்த நிலையில், மேற்கண்ட பல்கலைக்கழகங்களில்‌ பதவி உயர்வில்‌ முறைகேடுகள்‌ நடைபெற்றதாக வெளிவந்த செய்திகள்‌, வரப்பெற்ற புகார்கள்‌ குறித்து ஆய்வு செய்ய உயர்கல்வித்துறையிலுள்ள இந்திய ஆட்சிப் பணி அலுவலர்‌ தலமையில்‌ குழு ஒன்று அமைக்கப்படும்‌ என மாண்புமிகு உயர்கல்வித்‌ துறை அமைச்சர்‌ அவர்கள்‌ தெரிவித்திருத்தார்‌.

மேற்கண்ட பொருண்மைகள்‌ குறித்து அரசு கவனமுடன்‌ பரிசீலனை செய்து, சேலம்‌ பெரியார்‌ பல்கலைக்கழகம்‌, மதுரை காமராசர்‌ பல்கலைக்கழகம்‌ மற்றும்‌ அண்ணாமலை பல்கலைக்கழகங்களில்‌ பதவி உயர்வில்‌ முறைகேடுகள்‌ நடைபெற்றதாக வெளிவந்த செய்திகள்‌, வரப்பெற்ற புகார்கள்‌ குறித்து ஆய்வு செய்ய திருமதி. சங்கீதா, துணை செயலாளர்‌, உயர்கல்வித்‌ துறை மற்றும்‌ இளங்கோ ஹென்றி தாஸ்‌, அரசு இணைச்‌ செயலாளர்‌ (பல்கலைக்கழகங்கள்‌) ஆகியோர்‌ கொண்ட விசாரனைக்‌ குழுவினைக்‌ கீழ்கண்ட நிபந்தனைகளுக்குட்பட்டு அமைத்து ஆணையிடுகிறது :-

மேற்கண்ட பல்கலைக்கழகங்களில்‌ பதவி உயர்வில்‌ நடைபெற்றுள்ள முறைகேடுகள்‌ குறித்து ஆய்வு செய்ய வேண்டும்‌.

மேற்கண்ட குழுவின்‌ விசாரணை அறிக்கை மூன்று மாதங்களுக்குள்‌ அரசுக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும்‌, என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 123

0

0