சேலம், கிருஷ்ணகிரி உள்பட 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!

17 August 2020, 2:04 pm
RAIN 1 - updatenews360
Quick Share

சென்னை : சேலம், கிருஷ்ணகிரி உள்பட 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்நமேற்கு பருவக்காற்று காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. தற்போது, மழையின் தாக்கம் ஓரளவிற்கு தணிந்த நிலையில், அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது ;- கோவை, நீலகிரி, சேலம்,கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

அடுத்த 48 மணி நேரத்திற்கு சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் பொதுவாக மேமூட்டத்துடன் காணப்படும். சில பகுதிகளில் மழை பெய்யும்.

வரும் 19ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதால், தமிழகத்தில் மழை தொடர வாய்ப்புள்ளது, எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 56

0

0