இந்த ஆண்டும் மாணவர்கள் ஆல் பாஸ்… அரசு ஊழியர்களும் ஹேப்பி… முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட எடப்பாடியார்..!!

25 February 2021, 11:53 am
EPS-in-assembly-updatenews360
Quick Share

சென்னை : பொதுத்தேர்வு எழுதும் பள்ளி மாணவர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ளார்.

இடைக்கால பட்ஜெட் தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடந்து வருகிறது. அதில், கேள்வி நேரம் முடிவடைந்த பிறகு, 110 விதியின் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், 2020 -21ம் கல்வியாண்டில் 9,10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு இன்றி தேர்ச்சி பெறுவதாக அறிவித்தார். பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தேதி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், திட்டமிட்டபடி மே 3ம் தேதி தேர்வு தொடங்கவிருக்கிறது.

ஏற்கனவே கடந்த ஆண்டு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 1 முதல் 11ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி பெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், இந்த ஆண்டும் மாணவர்கள் ஆல் பாஸ் என அறிவிக்கப்பட்டிருப்பது மாணவர்களிடையே மகிழ்ச்சியையும், வரவேற்பையும் பெற்றுள்ளது.

இதேபோல, அரசு ஊழியர்களுக்கான ஓய்வு பெறும் வயது 59 ல் இருந்து 60 ஆக உயர்த்தப்படுவதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு 2021ம் ஆண்டு மே 31ம் தேதிக்குள் ஓய்வு பெறும் அரசு ஊழியர்கள் அனைவருக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

Views: - 8

1

0