தொடரும் ஒன்றரை வருட போராட்டம்.. பரந்தூர் விமான நிலையம்.. 20 கிராம நிலங்களை கையகப்படுத்த அரசாணை.. குவியும் கண்டனம்!

Author: Udayachandran RadhaKrishnan
24 November 2023, 4:22 pm
Ariport
Quick Share

தொடரும் ஒன்றரை வருட போராட்டம்.. பரந்தூர் விமான நிலையம்.. 20 கிராம நிலங்களை கையகப்படுத்த அரசாணை.. குவியும் கண்டனம்!

சென்னை விமான நிலையம் போலவே பரந்தூரில் 2-வது விமான நிலையம் அமைய உள்ளது. இதற்காக பரந்தூர் மற்றும் அதனை சுற்றிய 20 கிராமங்களில் சுமார் 5746 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இதற்கு பரந்தூர் சுற்று வட்டார மக்கள் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஏகனாபுரத்தில் இந்தப் போராட்டம் நாள்தோறும் நடைபெறுகிறது. அதேபோல பரந்தூர் சுற்று வட்டார கிராம சபை கூட்டங்களிலும் விமான நிலையத்துக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்தநிலையில் பரந்தூர் விமான நிலையத்துக்கு நிலங்களை கையகப்படுத்த ஒப்புதல் அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசு. பரந்தூரை சுற்றிய 20 கிராமங்களில் 5746 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இதற்காக ரூ19.24 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.

தமிழ்நாடு அரசின் இந்த அரசாணை போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பரந்தூர் சுற்றுவட்டார விவசாயிகளை கொந்தளிக்க வைத்துள்ளது. மேலும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டும் விவசாயிகள் தர்ணா போராட்டம் நடத்தினர். இதனால் விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.

தமிழ்நாடு அரசின் இந்த அரசாணைக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தினகரன் வெளியிட்ட அறிக்கையில் பரந்தூர் பசுமை விமானநிலையம் அமைக்கும் பணிக்காக விவசாயிகளின் போராட்டத்திற்கு செவி சாய்க்காமல் விளைநிலங்களை கையகப்படுத்த அரசு பிறப்பித்திருக்கும் உத்தரவு கடும் கண்டனத்திற்குரியது.

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமையவுள்ள சென்னையின் இரண்டாவது விமான நிலையத்தால் பரந்தூர், வளத்தூர், தண்டலம், ஏகனாபுரம், எடையார்பாக்கம், அக்கம்மாபுரம், உள்ளிட்ட 13 கிராமங்களைச் உள்ளடக்கிய பகுதிகளில் விளைநிலங்கள் மற்றும் முக்கியமான நீர் நிலைகள் பாதிக்கப்படும் என்பதால் அப்பகுதி பொதுமக்களும் விவசாயிகளும் எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டம் நடத்தி வரும் நிலையில் அவர்களின் கோரிக்கைகளுக்கு மாறாக, நிலம் கையகப்படுத்துவதற்கான நிர்வாக அனுமதியை தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது.

Views: - 326

0

0