மீண்டும் நடந்த பரிசோதனையில் கொரோனா நெகட்டிவ் : நடிகர் சிரஞ்சீவி தகவல்

13 November 2020, 10:40 am
chiranjeevi - updatenews360
Quick Share

ஐதராபாத் : தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவிக்கு மீண்டும் நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என முடிவு வந்துள்ளதாகக் கூறியுள்ளார்.

கொரோனா ஊரடங்கு காலங்களில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்காக ‘CORONA CRISIS CHARITY’ என்ற அமைப்பை தொடங்கினார் நடிகர் சிரஞ்சீவி. இந்த அமைப்பின் மூலம் பல்வேறு தரப்பில் இருந்தும் நிதி திரட்டி, அதை வைத்துத் தொழிலாளர்களின் வீடுகளுக்கே மளிகைப் பொருட்கள், பண உதவி எனச் செய்து வந்தார்.

இதனிடையே, தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இது தொடர்பாக அவர் விடுத்துள்ள டுவிட்டர் பதிவில், “ஆச்சார்யா படத்திற்கான படப்பிடிப்பின் போது தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அறிகுறிகள் இல்லாத நிலையில், தன்னை தனிமைப்படுத்திக் கொண்டேன். கடந்த 5 தினங்களில் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள், கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுங்கள்,” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில், தனக்கு மீண்டும் நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் கொரோனா நெகட்டிவ் என்று வந்துள்ளதாக நடிகர் சிரஞ்சீவி கூறியுள்ளார். மேலும், ஏற்கெனவே செய்த பரிசோதனையிலும் பாசிட்டிவ் என்று முடிவு தவறாக வந்துள்ளதாக தெரிவித்த அவர், அதற்கான மருத்துவமனைப் பரிசோதனை முடிவையும் தனது பதிவில் அவர் இணைத்துள்ளார்.

Views: - 27

0

0

1 thought on “மீண்டும் நடந்த பரிசோதனையில் கொரோனா நெகட்டிவ் : நடிகர் சிரஞ்சீவி தகவல்

Comments are closed.