பண மோசடி செய்ததாக சூரி அளித்த புகாரில் திருப்பம்: நடிகர் விஷ்ணு விஷால் திட்டவட்ட மறுப்பு….!!

By: Aarthi
9 October 2020, 2:26 pm
Vishnu-Vishal-with-his-Father - updatenews360
Quick Share

நிலம் வாங்கி தருவதாக கூறி 2 கோடியே 70 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக சூரி அளித்த புகாரிற்கு நடிகர் விஷ்ணு விஷால் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளார்.

நடிகர் சூரியிடம் 2 கோடியே 70 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன், நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தையுமான ரமேஷ் குட்வாலா ஆகியோர் மீது அடையாறு போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

கடந்த 2015ம் ஆண்டு வீர தீர சூரன் படத்தில் நடித்ததற்காக நடிகர் சூரிக்கு ரூ. 40 லட்சம் சம்பள பாக்கி வைத்துள்ளார் தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன். சம்பள பாக்கியை பணமாக தருவதற்கு பதில் நிலம் வாங்கி தருவதாக கூறி நடிகர் சூரியிடம் 2 கோடியே 70 லட்சம் ரூபாய் பணம் பெற்று மோசடி செய்துள்ளனர்.

ஆனால் பணத்தையும் திரும்ப தராமல், நிலத்தையும் கிரயம் செய்து கொடுக்காமல் ஏமாற்றியதாக நடிகர் சூரி தரப்பில் புகாரளிக்கப்பட்டது.

soori-2-updatenews360

புகாரின் அடிப்படையில் தயாரிப்பாளர் அன்புராஜன் மற்றும் ரமேஷ் குடவாலா ஆகியோர் மீது அடையாறு போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தற்போது, இதற்கு மறுப்பு தெரிவித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளார் நடிகர் விஷ்ணு விஷால். அந்த அறிவிப்பில் தன் மீதும், தன் தந்தை மீதும் கூறப்பட்டுள்ள மோசடி புகார் பொய்யானது என்று தெரிவித்துள்ளார்.

மேலும், இத்தகைய பொய்யான குற்றச்சாட்டுகள் அதிர்ச்சியும், வருத்தமும் அளிப்பதாகவும், இதனை சட்டப்படி எதிர்கொள்வோம் எனவும் தெரிவித்துள்ளார்.

Views: - 58

0

0