மேகதாது அணை விவகாரம்…!! தமிழகத்தில் அனைத்து கட்சி குழு டெல்லி பயணம்

15 July 2021, 9:33 am
Quick Share

தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களுக்கு காவிரி அணையின் மூலம் தண்ணீர் கிடைக்கிறது. ஆண்டு தோறும் பயிர் விளைச்சலுக்கு காவிரி அணை திறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. தமிழ்நாட்டின் நீர் ஆதாரமான காவிரியில் மேகதாது அணை கட்டப்பட்டால் டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் வாழ்வாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என தமிழக அரசு கூறுகிறது. இது குறித்து கர்நாடக அரசிடம் தமிழக அரசு கோரிக்கை வைத்தது. ஆனால் அம்மாநில அரசு கோரிக்கையை மறுத்து விட்டது.

இது தொடர்பாக கருத்து பெற தமிழகத்தில் அனைத்து கட்சி உறுப்பினர்கள் அடங்கிய ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற கட்சி பிரதிநிதிகளும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். மேகதாது அணை கட்டும் முயற்சியை கர்நாடக அரசு கைவிட வேண்டும் என முதல்வர் முக ஸ்டாலின் கர்நாடக முதல்வர் எடியூரப்பாக்கு கடிதம் எழுதினார். அதில் அணை கட்டுவதை தடுத்து நிறுத்துவதற்கு சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு அனைத்து முயற்சிகளையும் தமிழக அரசு மேற்கொள்ளும் என்று குறிப்பிட்டார்.

இந்த நிலையில் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக நடத்தப்பட்ட அனைத்துக் கட்சி கூட்டத்தில் உறுப்பினர்கள் நேரடியாக மத்திய அரசிடம் வலியுறுத்த முடிவு செய்தனர்.மேகதாது அணை தொடர்பாக மத்திய அரசை வலியுறுத்த ஏற்கனவே அனைத்துக் கட்சி குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி தமிழ்நாடு அனைத்துக் கட்சி குழு இன்று டெல்லிக்கு சென்று பிரதமர் மற்றும் மத்திய நீர்வளத் துறை அமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்தயுள்ளது.

Views: - 106

0

0