சென்னையில் தமிழக பாஜக நிர்வாகிகளுடன் அமித் ஷா ஆலோசனை..!

21 November 2020, 9:29 pm
Amit_Shah_Chennai_UpdateNews360
Quick Share

அரசு மற்றும் கட்சி சார்ந்த பணிகளுக்காக தமிழகம் வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இன்று சென்னையில் தமிழக பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இன்று மதியம் சென்னை விமான நிலையம் வந்த அமித் ஷா, கலைவாணர் அரங்கில் வீடியோ கான்பெரன்ஸ் முறையில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது தமிழகத்தில் பல புதிய திட்டங்களை தொடங்கி வைத்த அமித் ஷா, மேலும் பல புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

இந்த விழாவை முடித்துக் கொண்டு பிறகு, லீலா பேலஸ் ஹோட்டலுக்குத் சென்றார். அவரைப் பின்தொடர்ந்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் சென்றனர்.

ஹோட்டலில் மூவரையும் தனியாக சந்தித்த அமித் ஷா, தமிழக அரசியல் நிலவரம் குறித்து தீவிர விவாதம் நடத்தியதாகக் கூறப்படுகிறது. அப்போது தமிழக அரசு சார்பில் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் வாடும் எழுவர் விடுதலை உள்ளிட்ட சில முக்கிய கோரிக்கைளை அமித் ஷாவிடம் எடப்பாடி தலைமையில் சென்ற குழு முன்வைத்துள்ளது.

இதையடுத்து 8 மணிக்கு மேல், தமிழக பாஜக நிர்வாகிகளுடன் அமித் ஷா ஆலோசனையைத் தொடங்கினார்.

இந்த கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி, மூத்த தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், இல கணேசன், அண்ணாமலை ஐபிஎஸ், குஷ்பூ உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

அப்போது தமிழக அரசியல் நிலவரம், கட்சியின் செயல்பாடு, தேர்தல் வியூகம் உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து தீவிர ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது.

Views: - 20

0

0