தயாநிதியை பற்றி எல்லாமே எங்களுக்கும் தெரியும்.. வெளியே சொன்னா…. அண்ணாமலை எச்சரிக்கை

Author: Babu
5 August 2021, 4:07 pm
annamalai - dayanidhi - updatenews360
Quick Share

மேகதாது அணை குறித்து விமர்சனம் செய்த திமுக எம்பி தயாநிதி மாறனுக்கு பாஜக தலைவர் அண்ணாமலை எச்சரிக்கை விடுத்துள்ளார்.

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்னும் இடத்தில் அணை கட்டும் முயற்சியில் கர்நாடகா அரசு தீவிரமாக உள்ளது. முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா முதல் தற்போதைய முதலமைச்சர் பசுவராஜ் பொம்மை வரை மேகதாது அணையை கட்டியே தீருவோம் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். கர்நாடகாவில் பாஜக ஆட்சி நடந்து வரும் நிலையில், தமிழக பாஜகவும் மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்தே வருகிறது.

அண்மையில் மேகதாது அணையை கட்டும் கர்நாடகா அரசின் முடிவை கண்டித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்தார்.

இந்தப் போராட்டத்திற்கு காவல்துறை வழங்காத நிலையில், இன்று தஞ்சையில் அறிவித்தபடி பாஜக உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளது. பச்சைத் துண்டை அணிந்து கொண்டு மாட்டு வண்டியில் தொண்டர்களின் புடைசூழ சென்று, அவர் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளார். இந்தப் போராட்டத்தில் தமிழக பாஜக இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, மூத்த தலைவர் இல. கணேசன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், பாஜக செயலாளர் எச்.ராஜா, பாஜக எம்எல்ஏக்கள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

போராட்டத்தின் போது செய்தியாளர்களிடம் பாஜக தலைவர் அண்ணாமலை பேசியதாவது :- இந்தப் போராட்டம் குறித்து அரசியல் தலைவர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். மய்யம் என்று கட்சி ஆரம்பித்து விட்டு மையம் இல்லாமல் செயல்படும் ஒருவர் (கமல்), 2 பொம்மைகள் என்று கூறுகிறார். நடிப்பின் உச்சகட்டம் அரசியல் என்பதை புரிந்து கமல் அரசியலுக்கு வந்துள்ளார். படப்பிடிப்பு போல், தேர்தல் பிரச்சாரம் செய்தார்.

சாராயம் விற்கும் அமைச்சரை பக்கத்திலும் வேளாண்மை அமைச்சரை தூரத்திலும் வைத்திருக்கும் அரசு இங்குள்ளது. பாஜகவின் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை கேவலமாக, இழிவாக பேசிய காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி உடனே பதவி விலக வேண்டும். இன்னொரு முறை தயாநிதி மாறன் எங்களைப் பற்றி பேசினால், அவர்களின் எல்லாம் விஷயமும் சந்திக்கு வரும். உங்களைப் பற்றி எல்லாமும் எங்களுக்குத் தெரியும்.

கர்நாடகா அரசை மட்டுமல்ல அங்குள்ள காங்கிரஸ், ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளையும் எதிர்த்துதான் இந்த போராட்டம். காவிரி மேலாண்மை ஆணையம், மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்தின் அனுமதி இல்லாமல் அணை கட்ட முடியாது, எனக் கூறியுள்ளார்.

Views: - 301

1

0