செயல் பாபு அல்ல… செயலற்ற பாபு… இந்து அறம் அழிக்கும் துறையாக மாறும் இந்து அறநிலையத்துறை : எச்.ராஜா கடும் விமர்சனம்..!!

Author: Babu
15 September 2021, 11:41 am
H raja - sekar babu - updatenews360
Quick Share

சென்னை : தமிழகத்தில் இந்து அறநிலையத்துறை தற்போது இந்து அறம் அழிக்கும் துறையாக மாறி வருவதாக பாஜக முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

பெரியார் சிலைகள் அகற்றுவது தொடர்பாக சர்ச்சைக் கருத்தை வெளியிட்டதால் தொடரப்பட்ட வழக்கில் பாஜக பிரமுகர் எச்.ராஜா நேற்று ஈரோடு நீதிமன்றத்தில் ஆஜரானார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசினார். அவர் பேசியதாவது :- தமிழகத்தில் இந்து அறநிலையத்துறை தற்போது இந்து அறம் அழிக்கும் துறையாக மாறி வருகிறது. சட்டப்பேரவையில் அமைச்சர் சேகர் பாபு வெளியிட்ட அறிவிப்புகள் வெற்று அறிக்கைகளாகவே இருக்கின்றன.

H Raja - Updatenews360

முதலமைச்சர் ஸ்டாலின் அமைச்சர் சேகர் பாபுவை செயல் பாபு எனப் பாராட்டி பேசினார். ஆனால், உண்மையில், அவர் செயலற்ற பாபு என்பதுதான் உண்மை. இதற்கு பல்வேறு ஆதாரங்களைக் கூறலாம். ஏற்கனவே, பல்வேறு சமூகத்தினர் கோவில்களில் அர்ச்சகராக இருந்து வரும் நிலையில், பின்னர் எதற்காக அது பற்றி புதிய அறிவிப்பு? வெளியிடப்பட்டது. அதேபோல, தமிழ்நாட்டில் மொத்தம் 38,665 கோயில்கள் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். ஆனால், இதுவே தவறான தகவல். கோயில்கள் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் சென்ற பிறகு அரசு இதுவரை ஒரு கோயிலாவது கட்டப்பட்டுள்ளதா..?

இந்து கோயில்களுக்கு சொந்தமான 4 லட்சத்திற்கும் அதிகமான ஹேக்டர் பரப்பளவில் நஞ்சை, புஞ்சை நிலங்கள் எங்கே..? ஆக்கிரமித்தவர்கள் மீது என்ன நடவடிக்கை..? இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 12 கல்லூரிகள் தொடங்கப்படும் என அமைச்சர் அறிவித்துள்ளார். உயர்கல்வி துறை அமைச்சரும் இது தொடர்பாக அறிவித்துள்ளார். எனவே, இந்த கல்லூரிகள் யார் கட்டுப்பாட்டில் இருக்கும் என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும்.

நீட் தேர்வினால் நிகழும் மரணங்களுக்கு திமுகவே காரணம். நீட் தேர்வு கட்டாயம் என ஆகிவிட்ட நிலையில், அதற்கு மாணவர்களை தயார் படுத்தாமல், அரசியல் செய்து வருவது கண்டிக்கத்தக்கது. பிற மாநிலங்களைப் போன்ற நீட் தேர்வை சுமூகமாக நடத்தவில்லை எனில் அவர்கள் பிரிவினைவாதிகள், என்று கூறினார்.

Views: - 116

1

0

Leave a Reply