‘இந்த நாடகத்தை முதலில் நிறுத்துங்கள்’ : நீட் விவகாரத்தில் திமுக விளாசிய பாஜக பெண் பிரமுகர்!!

14 July 2021, 12:12 pm
gayathri raguram - stalin - updatenews360
Quick Share

சென்னை: நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய்வதற்காக, தமிழக அரசால் அமைக்கப்பட்ட ஏ.கே.ராஜன் குழுவை நடிகையும், பாஜக பிரமுகருமான காயத்ரி ரகுராம் விமர்சித்துள்ளார்.

மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட நீட் தேர்வால் ஏழை எளிய மாணவர்களின் மருத்துவர் கனவும், எதிர்காலமும் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. இந்நிலையில், தமிழகத்தில் நீட் தேர்வு பாதிப்புகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்யுமாறு ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் 8 பேர் கொண்ட உயர்மட்ட குழுவை தமிழக அரசு நியமித்தது.

இதனையடுத்து, நீட் தேர்வு பாதிப்புகள் குறித்து மாணவர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்டோர் கருத்து தெரிவிக்கலாம் என இக்குழு அறிவித்திருந்தது. சுமார் 89 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நீட் தேர்வுக்கு எதிராகவும், ஆதரவாகவும் தங்களது கருத்துகளை கூறியுள்ளனர்.

நீட் தேர்வு குறித்து ஆராய்வதற்காக அமைக்க பாஜ ஆரம்பத்தில் இருந்தே எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. எனவே, ஏ.கே. ராஜன் குழு அமைத்ததை எதிர்த்து பாஜகவைச் சேர்ந்த கரு.நாகராஜன் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.

இதைத் தொடர்ந்து, இன்று காலை 165 பக்கங்கள் கொண்ட அறிக்கையை ஏ.கே.ராஜன் தலைமையிலான குழுவினர் முதலமைச்சர் ஸ்டாலினிடம் அளித்தனர்.

இந்த நிலையில், நீட் தேர்வு குறித்த ஆய்வு அறிக்கையை ஏகே ராஜன் குழு சமர்பித்ததை குறிப்பிட்டு, திமுக அரசை நடிகையும், பாஜக பிரமுகருமான காயத்ரி ரகுராம் விமர்சித்து டுவிட் போட்டுள்ளார்.

அவர் விடுத்துள்ள டுவிட்டர் பதிவில், “இந்த நாடகத்தை நிறுத்துங்கள். DMK மாணவர்களை தவறாக வழிநடத்துவதோடு, பரீட்சைக்கு ஊக்குவிக்கவில்லை,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 283

3

0