செல்போனை ஒட்டு கேட்கும் தமிழக உளவுத்துறை… கோபாலபுரம் குடும்பம் சிறை செல்வது கியாரண்டி ; அண்ணாமலை!!

Author: Babu Lakshmanan
11 April 2024, 1:22 pm
Quick Share

அமைச்சர் டிஆர்பி ராஜாவின் தந்தை டிஆர் பாலுவே சமூக விரோதிதான் என்று கோவை தொகுதி வேட்பாளர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

கோவை பீளமேடு ஜிவி ரெசிடென்சி பகுதியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர் சந்தித்தார். அப்போது, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிர்வாகிகள் பாஜக வேட்பாளர் அண்ணாமலையை சந்தித்து மனு அளித்தனர்.

மேலும் படிக்க: ‘எனக்கும் தோட்டம் கொத்த தெரியும்’… விவசாயப் பணி செய்து வாக்குசேகரித்த சௌமியா அன்புமணி!!!

பின்னர், செய்தியாளர்களிடம் அண்ணாமலை பேசியதாவது :- பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நேற்று முதல் காலவரையற்ற போராட்டம் நடத்த விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் அறிவித்துள்ளனர். மத்திய அரசு கொப்பறை கொள்முதலை தனியாருக்கு விட வேண்டாம் என கோரிக்கை விடுத்தனர்.

நியாயவிலைக் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும் என நடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக தேர்தலுக்கு வாக்குறுதி கொடுத்தார்கள். அதை மீண்டும் என்னிடம் கொடுத்துள்ளார்கள். அதற்கு நான் ஏற்றுக்கொள்கிறேன்.

ஜூன் நான்காம் தேதி வரை இந்த போராட்டத்தை கைவிடுங்கள். புதிய அரசு அமைந்தவுடன் மத்திய அரசிடம் நான் பேசுகிறேன். பத்திரிகையாளர்கள் யாரிடம் சென்றால் கருத்து கிடைக்கும் என்று பத்திரிகை நண்பர்கள் வருகிறீர்கள். கருத்து சொல்ல முடியாதவர்கள் நரி மரத்தில் உள்ள பழத்தை பார்த்து பழம் பறிக்க முயற்சித்து பழம் கிடைக்கின்றது என்றால், பழம் புளிக்கிறது என்றும். இபிஎஸ் இன்று பழம் புளிக்கிறது என்று இருக்கிறார்.

இதுவரை பத்திரிகையாளர் சந்திப்பு நடத்துகிறோம் வாருங்கள் என்று நான் கூறவில்லை. இன்று அவ்வளவு பிரச்சனைகள் இருக்கிறது. பிரச்சனைகளை கேட்கிறார்கள், பிரச்சனைகளுக்கான தீர்வு கேட்கிறார்கள். இன்று இபிஎஸ் அவர்களின் பேச்சு ராசி பலன் அளிக்கிறது என்று சொல்வதை போலிருக்கிறது. ஆட்சியில் திமுக இருக்கிறது, மேலே நாங்கள் ஆட்சியில் இருக்கிறோம்.

தமிழகத்தில் 13 ஆண்டு காலங்கள் ஆட்சியில் இருப்பது திமுக அதனால் தான். இபிஎஸ்-ஐ வேண்டுமானால் ரோடு சோ போகச் சொல்லுங்கள். எவ்வளவு பேர் வருகிறார்கள் என்று பார்க்கலாம். அவர்கள் வீதிக்கு வந்தால் பார்ப்பதற்கு மக்கள் தயாராக இல்லை. மக்கள் தரிசன யாத்திரை, இது ரோட் ஷோ அல்ல. டிஆர்பி ராஜாவின் அப்பாவே ஒரு சமூக விரோதி, அவர் ஒரு சாராய வியாபாரி.

வெள்ளையும், சொல்லையுமாக இருந்துவிட்டு சாராய வியாபாரம் செய்து வருகிறார்கள். அவர்களும் சாராய வியாபாரி தான். டிஆர்பி ராஜா சமூக விரோதிகளை பற்றி பேசுவது காமெடியாக இருக்கிறது. அவர் எனது தந்தை சாராயம் விற்கவில்லை என்று சொல்லட்டும் நான் சொல்கிறேன். தஞ்சாவூரில் திமுக ஆட்சியில் புதிதாக சாராய ஆலை திறப்பதற்கு விவசாய மக்களை தடியடி நடத்திய நாளை இன்றும் கருப்பு நாளாக அனுசரித்து வருகிறார்கள்.

மேலும் படிக்க: ஊழல் பற்றி பாஜக பேசலாமா..? மிரட்டி வாங்கிற காசுக்கும்.. பொருளுக்கும் வித்தியாசம் இருக்கா..? கனிமொழி பாய்ச்சல்…!!

இன்று எதற்காக ஸ்ரீபெரும்புதூரில் தஞ்சம் அடைந்து இருக்கிறார்கள் என்றால், நம்மை பற்றி யாருக்கும் தெரிய கூடாது என்பதற்காக தான். 2024க்கு பிறகு கோபாலபுரத்தில் இருப்பவர்கள் எல்லாரும் உள்ளே இருப்பார்கள் என்று கேரண்டி கொடுப்பார் பிரதமர் மோடி. தமிழ்நாட்டில் டாஸ்மாக் இருக்காது என கேரண்டி கொடுப்பார் பிரதமர் மோடி.

மக்களைப் பொருத்தவரை மிகத் தெளிவாக இருக்கிறார்கள். இந்த தேர்தலில் குடும்ப ஆட்சி, அதை ஒழித்து கட்ட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். மாமன்னன் படம் குறித்து விமர்சித்த அவர், அந்த படத்தை நான் பார்க்கவில்லை. அதைவிட முக்கியமான வேலைகள் எனக்கு இருக்கிறது, என கூறினர்

சினிமா மீது எனக்கு கோபம் இல்லை. மாமன்னன் போன்ற பிரபகண்டா செய்யும் படங்களை எனக்கு பிடிக்கவில்லை. நேற்று ஒரு குழந்தைக்கு பெயர் வைத்த உதயநிதி ஸ்டாலின் ரோலக்ஸ் என்று பெயர் வைத்திருக்கிறார். அண்மையில் கமலஹாசன் நடித்த திரைப்படத்தில் போதைப்பொருள் விற்கும் தலைவனின் பெயர் ரோலக்ஸ்.

ஸ்டாலின் வருகிறார் என்றால் மக்கள் இந்த பக்கம் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால் ஸ்டாலின் அந்த பக்கம் வருகிறார். அதனால் இந்த பக்கம் வருகிறேன் என்கிறார்கள். 2024ல் கொங்கு மண்டலம் யாருடையது என பார்க்கலாம். கோவை மாநகராட்சியில் பினாயில் வாங்கியது முதல் பல ஊழல்கள் இருக்கிறது. அதை பத்திரிகையாளர்கள் வெளிப்படுத்தியுள்ளீர்களா..?

யாராவது அந்த செய்தியை பிரேக் செய்தால் டாடா ஸ்கை அரசு கேபிளில் உங்கள் சேனல் இருக்காது. தமிழகத்தில் ஊடகம் சத்தியமாக சுதந்திரமாக இல்லை. ஊழல் குறித்து நீங்கள் செய்தி வெளியிட்டால், மோசமான ஆட்கள் திமுகவினர் தண்ணீர் லாரியை விட்டு ஏற்றி விடுவார்கள். 2024க்கு பிறகு எத்தனை ஐபிஎஸ் அதிகாரிகள் ஜெயிலுக்கு போவார்கள் என பாருங்கள்.

யாரெல்லாம் உளவுத்துறையில் வேலை செய்து கொண்டிருக்கிறீர்களோ, உங்களுக்கெல்லாம் இருக்கிறது. திமுகவின் வேராக மோசமான ஆட்களே உள்ளனர். 2024க்கு பிறகு முதலில் கை வைக்கப்போவது காக்கி சட்டை போட்ட அதிகாரிகளுக்கு தான்

ஊழல் யுனிவர்சிட்டிக்கு வேந்தராக பிரதமர் இருக்கிறார் என்றால், யுனிவர்சிட்டி ஸ்டாலின் யுனிவர்சிட்டியாக இருக்க வேண்டும். என்ன பார்த்தால் பவர் மீது ஆசை இருப்பது போல் தெரிகிறதா..? பவர் மீது ஆசை இருப்பவர் இப்படி பேசுவாரா..?

நாடாளுமன்றத்தில் எதிர்கட்சியினர் தான் அதிகமாக பொய் பேசுகிறார்கள். நகர உள்கட்டமைப்பு மேம்படுத்த வேண்டும். தண்ணீர், சாலை வசதி ஆகியவை மேம்படுத்த வேண்டும். ஆனைமலை நல்லாறு திட்டம் தொடர்பாக அதிமுக 70 ஆண்டுகளாக நாடகம் நடத்தி வருகிறது. தொழில் மற்றும் விவசாயத்தை மேம்படுத்த வேண்டும்.

இந்தி கூட்டணியின் விவாதம் நாம் எத்தனை இடங்களில் வெல்வோம் என்பது கிடையாது. பாஜக நானூறு வாங்க விட கூடாது என்பதாக தான் இருக்கிறது. தமிழகத்தில் வெற்றி பெறனும் எப்படி வெற்றி பெறனும், பண அரசியல் என்னும் பேயை கோவையிலிருந்து விரட்ட போகிறார்கள் மக்கள். பேயை ஓட்டுவதை போல் மக்கள் பண அரசியலை ஓட்ட போகிறார்கள்

என்னை கண்காணியுங்கள் என் பெயரில் யாராவது பணம் கொடுத்தாலும், அதையும் கண்காணியுங்கள். ஒரே நாடு ஒரே தேர்தல் வரத்தான் போகிறது. இதை கலைஞர் ஐயா விரும்பினார். அவர் மேலிருந்து ஆசிர்வாதம் செய்வார். 85 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு கம்மல் தோடு கொடுத்துள்ளனர். ஆட்சிதான் செய்யவில்லை, ஆயிரம் ரூபாய் கொடுத்தால் வாங்கி கொள்ளுங்கள்.

மக்களுக்கு பணம் கொடுத்தால் வாங்கி கொள்ளுங்கள், நியாயமாக ஓட்டு போடுங்கள். என்னுடைய செல்போன் உரையாடல் மற்றும் என் உறவினர்களின் செல்போன் உரையாடல் ஆகியவற்றை டேப் செய்து கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் உளவுத்துறை அதிகாரிகள், எனக் கூறினார்.

Views: - 106

0

0