டாட்டா காட்டிய பாமக… காய்நகர்த்தும் பாஜக : எடப்பாடி பழனிசாமியுடன் அண்ணாமலை சந்திப்பு

Author: Babu Lakshmanan
17 September 2021, 7:28 pm
bjp - admk - updatenews360
Quick Share

சென்னை : உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியுடன், பாஜக தலைவர் அண்ணாமலை சந்தித்து பேசினர்.

தமிழகத்தில் வேலூர், அரக்கோணம், திருப்பத்தூர் உள்பட 9 மாவட்டங்களில் அக்.,6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இருகட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. அக்.,12ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

உள்ளாட்சி தேர்தலுக்காக அனைத்து அரசியல் கட்சியினரும் ஆயத்தமாகி வருகின்றன. அதிமுக கூட்டணியில் இருந்து விலகி, பாமக தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. அதேபோல, மக்கள் நீதி மய்யம், தேமுதிக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளும் தனித்து களமிறங்குகிறது.

இந்த நிலையில், உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியுடன், பாஜக தலைவர் அண்ணாமலை சந்தித்து பேசினர். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள வீட்டில் நடந்த இந்த சந்திப்பின் போது, மத்திய இணையமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.

அதிமுக கூட்டணியில் இருந்து பாமக விலகிய நிலையில், இந்த சந்திப்பு நடந்து வருகிறது.

Views: - 232

0

0