வாக்காளர் பட்டியலில் குளறுபடி… மறுவாக்குப்பதிவுக்கு வலியுறுத்தும் பாஜக… தேர்தல் அதிகாரியிடம் பரபரப்பு புகார்..!!

Author: Babu Lakshmanan
19 April 2024, 6:09 pm
Quick Share

கோவை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் மறுவாக்கு பதிவு நடத்த தேர்தல் அதிகாரியிடம் புகார் மனு அளிக்க உள்ளதாக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

கோவை நாடாளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் அதன் கட்சித் தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார். இந்த நிலையில் கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள அங்கப்பா பள்ளியில் பூத் எண் 214 ல் 1353 ஓட்டு உள்ளது. கடந்த உள்ளாட்சித் தேர்தலில் 1353 ஓட்டுக்கள் இருந்த நிலையில் தற்போது வெறும் 523 ஓட்டுக்கள் மட்டுமே உள்ளன. மீதம் 830 ஓட்டுகள் காணவில்லை.

மேலும் படிக்க: ‘இப்ப மட்டும் ஏன் வர்றீங்க..?’ அமைச்சரை காரை விட்டு இறங்க விடாமல் விரட்டியடித்த மக்கள்… தூத்துக்குடியில் பரபரப்பு..!!!

இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாஜகவினர் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் கேட்டனர். மேலும் இது ஒவ்வோரு வாக்காளர் எண்ணையும் மொபைலில் ஐடியை வைத்து செக் பண்ணும் போது அதில் அந்த எண்கள் இல்லை என்றே வருகிறது என்று அதிகாரிகளிடம் கூறியுள்ளனர்.இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என சாலையில் உட்கார்ந்து பாராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் நேரில் வந்து அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

அப்போது, வேண்டுமென்றே வாக்காளர்களின் பெயர் நீக்கப்பட்டுள்ளதாகவும், ஓட்டு போட அனுமதி மறுக்கப்பட்டவர்கள் அனைவரும் இணைந்து மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் மறுவாக்கு பதிவு நடத்த மனு கொடுக்க உள்ளதாக தெரிவித்தார்.

Views: - 121

0

0

Leave a Reply