டெல்லியில் பாஜக தேசிய மகளிரணி தலைவராக பொறுப்பேற்றார் வானதி சீனிவாசன்!!

19 November 2020, 11:17 am
vanathi - updatenews360
Quick Share

பாஜக தேசிய மகளிரணி தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த வானதி சீனிவாசன் டெல்லியில் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

பா.ஜ.க.வின் தேசிய தலைவராக ஜே.பி. நட்டா பொறுப்பேற்றதை தொடர்ந்து, மாற்றியமிக்கப்பட்ட தேசிய நிர்வாகிகளின் பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த தலைவர்களுக்கு எந்தவித பொறுப்பும் வழங்கப்படாமல் இருந்து வந்தது. இந்த சூழலில்,
பா.ஜ.க. தேசிய மகளிர் அணி தலைவராக வானதி சீனிவாசன் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா அண்மையில் அறிவித்தார்.

இந்த நிலையில், டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பாஜக தேசிய மகளிரணி தலைவராக வானதி சீனிவாசன் பொறுப்பேற்றார். அவருக்கு ஏராளமான மகளிர் அணி நிர்வாகிகள் சால்வை அணிவித்தும், பூங்கொத்து கொடுத்தும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Views: - 27

0

0

1 thought on “டெல்லியில் பாஜக தேசிய மகளிரணி தலைவராக பொறுப்பேற்றார் வானதி சீனிவாசன்!!

Comments are closed.