வேட்பாளர்களின் குற்றப்பின்னணி விபரங்களை வெளியிட வேண்டும் : தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு..!

11 September 2020, 7:25 pm
Election_Commission_of_India_UpdateNews360
Quick Share

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் குற்றப்பின்னணி விபரங்களை குறிப்பிட்ட இடைவெளியில் 3 முறை விளம்பரப்படுத்த வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் சட்டசபை தேர்தல்கள் மற்றும் இடைத்தேர்தல்களை நடத்தி முடிக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இதற்கான வழிமுறைகளை வகுத்துள்ள ஆணையம், தேர்தலுக்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதனிடையே, சட்டசபை, நாடாளுமன்ற தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்களில் பெரும்பாலானோர் ஏதேனும் குற்றப்பின்னணி கொண்டவர்களாக இருப்பதால், அது போன்ற நபர்களை தேர்தல்களில் போட்டியிட அனுமதிக்கக் கூடாது என இந்திய தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கைகளை வலுத்து வருகின்றன. இது தொடர்பாக, நீதிமன்றங்களிலும் பலமுறை முறையிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் குற்றப்பின்னணி விவரங்களை ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் 3 முறை விளம்பரப்படுத்த வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வேட்புமனுவை வாபஸ் பெறுவதற்கான கடைசி நாளுக்கு முன்னதாக, நாளிதழ் அல்லது ஊடகங்கள் வாயிலாக இது தொடர்பான விளம்பரத்தை வெளியிட வேண்டும்’’ என கூறியுள்ளது.

Views: - 0

0

0