முந்திரி ஆலை தொழிலாளி கொலை வழக்கு : திமுக எம்பி ரமேஷ்க்கு சிபிசிஐடி எதிர்ப்பு.. ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்!!

Author: Udayachandran RadhaKrishnan
23 October 2021, 7:09 pm
Cuddlaore MP -Updatenews360
Quick Share

கடலூர் : முந்திரி ஆலை தொழிலாளியை கொலை செய்த வழக்கில் கடலூர் திமுக எம்பி ரமேஷ் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து கடலூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடலூர் மாவட்டம் பணிக்கன்குப்பத்தில் திமுக எம்.பி. ரமேசுக்கு சொந்தமான காயத்ரி முந்திரி ஆலையில் பணியாற்றி வந்த கோவிந்தராசு என்பவர் கடந்த செப்.,20ம் தேதி கொலை செய்யப்பட்டார். திமுக எம்பி ரமேஷ் மற்றும் அவரது நெருங்கிய நபர்கள் சேர்ந்து, கோவிந்தராசுவை அடித்தும், விஷம் கொடுத்தும் கொன்றதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் நடத்திய விசாரணையில், திமுக எம்பி ரமேஷ் இந்த கொலையை செய்துள்ளார் என்பதை உறுதி செய்து வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த திமுக எம்பி ரமேஷ், பண்ருட்டி நீதிமன்றத்தில் சரணடைந்தார். இதையடுத்து, அவர் சிபிசிஐடி விசாரமணைக்கு பிறகு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில், கொலை வழக்கு தொடர்பாக திமுக எம்பி ரமேஷ் மற்றும் ஊழியர்கள் 5 பேரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி கடலூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் சிபிசிஐடி மனு தாக்கல் செய்தது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, அவர்களுக்கு ஒரு நாள் சிபிசிஐடி காவல் விதித்து உத்தரவிட்டது. இதையடுத்து, திமுக எம்பி உள்ளிட்டோரை சிபிசிஐடி போலீசார் தங்களின் கட்டுப்பாட்டில் எடுத்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.

இதனிடையே எம்பி சார்பில் ஜாமீன் கேட்டு வழக்கறிஞர் சிவராஜ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த நிலையில் இந்த வழக்கில் முகாந்திரம் இருப்பதால் ரமேஷ்க்கு ஜாமீன் தரக்கூடாது என சிபிசிஐடி வாதிட்டது. இதையடுத்து எம்பியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

Views: - 216

0

0