வலுவடையும் தென் மேற்கு பருவமழை…! 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!

2 August 2020, 2:10 pm
RAIN 1 - updatenews360
Quick Share

சென்னை: நாளை முதல் தென்மேற்கு பருவமழை மேலும் வலுவடையும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் தென் மேற்கு பருவ மழை மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் ஏற்பட்டு இருக்கிறது. அதன் காரணமாக கடந்த சில நாட்களாக பெரும்பாலான மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வந்தது.

சென்னையில் சில நாட்களுக்கு முன்பு மழை கொட்டியது. அதே போன்று புதுக்கோட்டை, கோவை உள்ளிட்ட பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது.

இந் நிலையில் வரும் 4ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று சென்னை வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதன் காரணமாக நாளை முதல் தென் மேற்கு பருவமழை மேலும் வலுவடையும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலை, ஆந்திரா, கர்நாடகா, ஒடிசா ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் திருவள்ளூர், விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட 19 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும்.

மழை காரணமாக தென்மேற்கு வங்கக்கடல் பகுதி மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை மையம் கூறி உள்ளது.

Views: - 36

0

0