சிறு, குறு தொழில்துறை குறித்து முதலமைச்சர் பழனிசாமி முக்கிய ஆலோசனை

21 October 2020, 10:47 am
Edappadi palanisamy - updatenews360
Quick Share

சென்னை : சிறு,குறு, நடுத்தர தொழில்துறையின் நிலை குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று முக்கிய ஆலோசனை நடத்தி வருகிறார்

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கினால், சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் துறைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், நலிவடைந்துள்ள போயுள்ள தொழில்துறையை மீண்டும் மேம்படுத்தும் வகையில், பல்வேறு தொழில் கடன்கள் மற்றும் சலுகைகளை மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ளன. குறிப்பாக, தமிழகத்தில் சிறு, குறு தொழில்கள் தொடங்குவதற்கான அனுமதி எளிமையாக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், தொழில்துறையில் தற்போதைய காலகட்டம் வரையில் போடப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பற்றி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது.

இந்தக் கூட்டத்தில் ஒப்பந்தம் போட்டுள்ள நிறுவனங்களின் நிலை பற்றி ஆலோசனை செய்யப்பட இருக்கிறது. அமைச்சர்கள் மற்றும் தொழில்துறை சார்ந்த அதிகாரிகள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

Views: - 18

0

0