16ம் தேதி பள்ளி, கல்லூரிகள் திறப்பு முடிவு வாபஸா..? அமைச்சர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை..!

4 November 2020, 1:37 pm
Edappadi palanisamy - updatenews360
Quick Share

சென்னை : பள்ளி, கல்லூரிகள் திறப்பது தொடர்பான முடிவு குறித்து அமைச்சர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக தமிழகத்தில் ஊரடங்கு நவ.,30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், அண்மையில் அறிவிக்கப்பட்ட தளர்வுகளின்படி, பள்ளிகள் (9,10,11 மற்றும் 12ம் வகுப்பு) கல்லூரிகள் வரும் 16ம் தேதி முதல் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் கட்டுக்குள் வந்தாலும், தற்போது பள்ளி, கல்லூரிகளை திறக்க சரியான நேரம் அல்ல என கல்வியாளர்களும், பெற்றோர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதனை ஏற்றுக் கொண்ட தமிழக அரசு, பள்ளி, கல்லூரிகளை திறக்கும் முடிவை மறுபரிசீலனை செய்ய உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், பள்ளிகள், கல்லூரிகள் திறப்பது குறித்து தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இன்று மாலைக்குள் பள்ளி, கல்லூரிகள் திறப்பு குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.

Views: - 19

0

0