ரூ. 353 கோடியினாலான 25 துணை மின்நிலையங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி..!

19 September 2020, 4:26 pm
eps- inaugurate updatenews360
Quick Share

சென்னை : ரூ. 353 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள 25 துணை மின் நிலையங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

தமிழகத்தில் மின்சாரப் பற்றாக்குறையை போக்குவதற்காக, தமிழக அரசின் ஆணையின்படி, பல்வேறு மாவட்டங்களில் துணை மின்நிலையங்கள் அமைக்கப்பட்டு வந்தன. இதையடுத்து, கட்டுமானப் பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், துணை மின்நிலையங்களை பயன்பாட்டிற்கு கொண்டு வரும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

சென்னை தலைமை செயலகத்தில் இருந்தவாறே, காணொளி காட்சியின் மூலம் 25 துணை மின் நிலையங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். சென்னை, கோவை, ஈரோடு, கடலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் ரூ.353.11 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, ரூ.9.70 கோடியிலான அரசு பள்ளிக் கட்டிடங்கள் மற்றும் நுங்கம்பாக்கம் பள்ளிக்கல்வி இயக்கக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கட்டிடம் ஆகியவற்றையும் அவர் திறந்து வைத்தார்.

Views: - 8

0

0