சென்னையில் துணை முதலமைச்சரை வீட்டிற்கு சென்று சந்தித்து பேசிய எடப்பாடியார்..!

By: Babu
7 October 2020, 6:17 pm
Cm in ops home - updatenews360
Quick Share

சென்னை : அதிமுக தேர்தல் வேட்பாளர் அறிவிக்கப்பட்ட நிலையில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவரது வீட்டிற்கு நேரில் சென்று சந்தித்து பேசினார்.

கடந்த சில நாட்களாக நிலவி வந்த அதிமுக முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற குழப்பத்திற்கு இன்று அக்கட்சியின் மேல்மட்ட நிர்வாகிகள் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். அடுத்த ஆண்டு நடக்கும் சட்டப்பேரவை தேர்தலில், எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தி அதிமுக தேர்தல் சந்திக்க இருப்பதாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.

வெற்றி வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை, அதிமுக வேட்பாளராக அறிவிப்பதில் மகிழ்ச்சியடைவதாகவும் பன்னீர்செல்வம் கூறியிருந்தார்.

இந்த நிலையில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்திப்பதற்காக சென்னையில் உள்ள அவரது வீட்டிற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்றார். அப்போது, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் கட்சியின் நிர்வாகிகளும் வாசலில் பூங்கொத்து கொடுத்து முதலமைச்சரை வரவேற்றனர். அந்த சமயம், துணை முதலமைச்சரின் மகனும், எம்பியுமான ரவீந்தரநாத் குமார், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் காலில் விழுந்து ஆசி பெற்றார்.

இதைத் தொடர்ந்து, வீட்டிற்குள் சென்று ஆலோசனை மேற்கொண்டனர். இந்த சந்திப்பின் போது, முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்தமைக்கு நன்றி தெரிவித்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

Views: - 43

0

0