“கனவுகளோடு நாடி வருபவர்களுக்கு முகவரி தேடித் தந்த சென்னை” : முதலமைச்சர் பழனிசாமி சென்னை தின வாழ்த்து

22 August 2020, 10:52 am
EPS_UpdateNews360
Quick Share

சென்னை : சென்னை மாநகர் உருவாகிய தினத்தையொட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

உலகின் மிகப்பெரிய நகரங்களில் டாப் 35 இடத்தை பிடித்துள்ளது சென்னை மாநகராட்சி. தமிழகத்தின் தலைநகராக விளங்கி வரும் சென்னை, 1639ம் ஆண்டு ஆகஸ்ட் 22ம் தேதி உருவாக்கப்பட்டது. கி.பி. 1ம் நூற்றாண்டு முதல் பல்லவ, சோழ மற்றும் விஜயநகரப் பேரரசுகளில் சென்னை ஒரு முக்கிய இடமாக விளங்கியதாகக் கருதப்படுகிறது. தற்போது, வர்த்தகம், தொழில்நகரம் உள்ளிட்டவற்றின் கூடாரமாக சென்னை திகழ்ந்து வருகிறது.

இந்த நிலையில்,சென்னை மாநகர் 381வது பிறந்த நாளை இன்று எட்டியுள்ளது. இதனை சென்னை வாசிகள் மிகவும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

சென்னை மாநகர் உருவாகிய தினத்தையொட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள டுவிட்டர் செய்தியில், “வந்தோரை வாழ வைக்கும் தமிழகத்தின் தலைநகரான சென்னை தோற்றுவிக்கப்பட்ட தினம் இன்று! கனவுகளோடு நாடி வருபவர்களுக்கு முகவரி தேடித் தந்த சென்னையின் வயது 381. பேரிடர்கள் பல கடந்து வந்த சென்னை, கொரோனா பேரிடரில் இருந்தும் விரைவில் மீண்டு வரும். இது நம்ம சென்னை!, எனத் தெரிவித்துள்ளார்.

இதேபோல, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விடுத்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது,

Views: - 32

0

0