டக்கு டக்கு-னு வேலை நடக்கனும்… அனைத்து செயலாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பிறப்பித்த உத்தரவு..!!

Author: Babu Lakshmanan
13 September 2022, 5:29 pm
Quick Share

அனைத்து துறைகளின் திட்டப் பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை கலைவாணர் அரங்கில் அனைத்துறை செயலாளர்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின் துறைவாரியாக மேற்கொள்ளப்பட வேண்டிய திட்டங்கள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார். இந்தக் கூட்டத்தில், அனைத்துத்துறையின் செயலாளர்களும் கலந்து கொண்டனர். அப்போது, துறைவாரியாக நிலுவையில் உள்ள திட்டங்கள் குறித்தும்…? அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களின் நிலை பற்றியும் முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டறிந்தார்.

மேலும் துறை வாரியான திட்டப்பணிகள், வருங்காலத்தில் செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் குறித்தும் விரிவான ஆய்வு நடத்தினார். குறிப்பாக, வடகிழக்கு பருவ மழை அடுத்த மாதம் தொடங்க இருக்கும் நிலையில், அதற்குள் செய்து முடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் இந்த கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

அப்போது, தமிழகத்தில் மழை, வெள்ள பாதிப்புகள் ஏற்படாத வகையில் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றும், திட்டப்பணிகளை விரைந்து செயல்படுத்தவும், துவக்கப்படாத பணிகளை விரைவில் துவங்கவும் முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

Views: - 115

0

0