தமிழகத்தில் பரபரப்பான அரசியல் நிலவரம்…. திடீரென டெல்லி செல்லும் முதலமைச்சர் ஸ்டாலின்…?

Author: Babu Lakshmanan
14 July 2022, 10:29 am
Cm Stalin Today - Updatenews360
Quick Share

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அடுத்த வாரம் டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் அதிமுகவில் ஏற்பட்ட மாற்றங்களால் அரசியல் சூழலில் பரபரப்பு நிலவி வருகிறது. இதனிடையே, வரும் ஆகஸ்ட் மாதம் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னையை அடுத்த மாமல்லபுரம், பூஞ்சேரி கிராமத்தில் வருகிற 28-ந் தேதி தொடங்குகிறது. பூஞ்சேரியில் போர்பாயிண்ட் ஷெரட்டன் நட்சத்திர விடுதி வளாகத்தில் 52 ஆயிரம் சதுர அடி பரப்பில் செஸ் விளையாட்டு வீரர்களுக்கான நவீன உள்விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும், அந்தப் பகுதியில் 22 சதுர அடி அளவிலான அரங்கத்தை விளையாட்டு அரங்கமாக மேம்படுத்தும் பணியும் நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டிகள் ஆகஸ்டு 10-ந் தேதி வரை நடக்கிறது. இந்தியாவில் முதல்முறையாக அரங்கேறும் வரலாற்று சிறப்பு மிக்க இந்த செஸ் திருவிழாவில் 187 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். இந்தப் போட்டிக்கான ஏற்பாடுகளை தமிழக அரசு தீவிரமாக செய்து வருகிறது. செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை சிறப்பாக நடத்துவதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சர்கள், அரசுத் துறை செயலாளர்கள் மற்றும் உயர் அலுவர்கள் அடங்கிய ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

செஸ் ஒலிம்பியாட்டின் பிரமாண்டமான தொடக்க விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் வருகிற 28-ந் தேதி மாலை 5.30 மணிக்கு நடக்கிறது. அந்த நிகழ்ச்சியில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை பிரதமர்மோடி தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்குகிறார்.

இந்தநிலையில், 4-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை துவக்கி வைக்க வருமாறு அழைப்பு விடுக்க பிரதமர் மோடியை சந்திக்க முதலமைச்சர் ஸ்டாலின் அடுத்த வாரம் டெல்லி செல்ல இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Views: - 423

0

0