அரேபிய மொழியில் வாசகங்கள்…. ஜமீஷா முபின் வீட்டில் கிடைத்த ஆவணங்கள்… விசாரணையில் போலீசாருக்கு அதிர்ச்சி…

Author: Babu Lakshmanan
3 November 2022, 11:48 am
Quick Share

கோவை ; கோவையில் ஜமீஷா முபின் வீட்டில் இருந்து எடுக்கப்பட்ட சில சந்தேகத்திற்குரிய ஆவணங்களை வைத்து விசாரணையானது நடத்தப்பட்டு வருகின்றது.

கோவை மாவட்டம் உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பாக கடந்த அக்டோபர் 23ம் தேதியன்று அதிகாலை மாருதி கார் வெடித்துச் சிதறியது. அதில் உக்கடம் ஜி.எம். நகர் பகுதியை சேர்ந்த ஜமேசா முபின் என்பவர் உடல் கருகி உயிரிழந்தார். கார் வெடித்து சிதறிய இடத்தில் ஆணிகள் கோழிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டன.

இது குறித்து உக்கடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் முபினிடம், 2019ம் ஆண்டு தேசிய பாதுகாப்பு முகமை அமைப்பினர் அவரிடம் விசாரணை நடத்தியதும் தெரியவந்தது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய 6 பேர் உபா சட்டத்தில் கைது செய்யப்பட்ட நிலையில், இது தொடர்பான வழக்கு என்ஐஏவுக்கு மாற்றம் செய்யப்பட்டது.

இதனிடையே, காவல் துறை முபீன் வீட்டை சோதனையிட்ட போது சில சந்தேகத்திற்கு உரிய குறிப்புகளை பறிமுதல் செய்தனர். அந்த குறிப்புகளில் ஹதீஸ் குறித்தும் ஜிகாத் குறித்தும் எழுதப்பட்டுள்ளது. யாருக்கெல்லாம் ஜிகாத் கடமை உண்டு, யாருக்கெல்லாம் இல்லை என்பது குறித்தும் அந்த குறிப்புகளில் எழுதப்பட்டுள்ளது. ‘அல்லாஹ்வின் இல்லத்தின் மீது கை வைத்தால் வேரறுப்போம்’, என்றும் சிலேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தவிர அரபி மொழியில் சில வாசகங்களும் சிலேட்டில் எழுதப்பட்டுள்ளது. போலீசாரிடம் கிடைத்த இந்த ஆவணங்கள் குறித்த தகவல் தற்போது வெளியாகி இருக்கின்றன. இது குறித்தும் விசாரணையானது நடத்தப்பட்டு வருகின்றது.

Views: - 296

0

0