கொரோனாவுக்கு முன்னாள் மத்திய அமைச்சர் அஜித்சிங் காலமானார் : பிரதமர் மோடி இரங்கல்

6 May 2021, 10:35 am
modi - ajith singh - updatenews360
Quick Share

டெல்லி : கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த முன்னாள் மத்திய அமைச்சர் அஜித்சிங்கின் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ராக்ஷட்ரிய லோக் தள கட்சி தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அஜித்சிங் 7 முறை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவராவார். முன்னாள் பிரதமர்கள் மன்மோகன்சிங், வாஜ்பாய் மற்றும் நரசிம்மராவ் ஆகியோரின் அமைச்சரவையிலும் இடம்பெற்றவர்.

82 வயதான இவர் அண்மையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டார். மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது மறைவிற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், பிரதமர் மோடி அஜித்சிங்கின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், “தன்னை விவசாயிகளின் நலனுக்காக அர்ப்பணித்தவர் அஜித்சிங். மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பல பொறுப்புகளை வகித்த திறமை வாய்ந்த நபரை நாடு இழந்துள்ளது,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 134

0

0