கொரோனா உயிரிழப்புகள்… தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை : ராமதாஸ் மகிழ்ச்சி…!!!

18 May 2021, 11:56 am
ramadoss updatenews360
Quick Share

சென்னை : கொரோனா உயிரிழப்பு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாள்தோறும் 33 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், 300க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் பதிவாகி வருகின்றன.

இதனிடையே, தமிழகத்தில் தகனம் செய்வதற்கு உடல்கள் வரிசை கட்டி வைத்திருப்பது, சவக்கிடங்குகளில் உடல்களை வைக்க இடம் இல்லாத நிலையும் ஏற்பட்டுள்ள நிலையில், பலி எண்ணிக்கையில் சந்தேகம் இருப்பதாக பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதையடுத்து, தமிழகத்தில் கொரோனா உயிரிழப்புகளை விபரங்களை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தமிழக அரசுக்கு வலியுறுத்தினார்.

இதனிடையே, கொரோனா உயிரிழப்பு தொடர்பாக உண்மையான தகவல் வெளியிட வேண்டும் என்றும், இது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும எனவும் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவிற்கு வரவேற்பு தெரிவித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், “தமிழ்நாட்டில் கொரோனா இறப்புகளை மறைக்காமல் வெளியிட வேண்டும்; அது குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்; கொரோனா சோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. இவை அனைத்தும் நான் வலியுறுத்தி வந்தவை என்பதில் மகிழ்ச்சி!,” என்றார்.

Views: - 175

0

0