கொரோனாவை தடுக்க ‘அம்மா கோவிட்-19’ திட்டம் : முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார்!!

5 August 2020, 4:08 pm
Edappadi palanisamy - updatenews360
Quick Share

சென்னை : கொரோனா அறிகுறியுடன் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்காக அம்மா கோவிட்-19 வீட்டுப் பராமரிப்பு திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸின் பாதிப்பு கடந்த மாதத்தை காட்டிலும் இந்த மாதத்தின் தொடக்கத்தில் இருந்து கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. நோய் தொற்றிற்கு எதிராக அரசு எடுத்து தடுப்பு நடவடிக்கைகளின் காரணமாக, முன்பை விட தற்போது குணமடைந்தவர்களின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இது தமிழக மக்களிடையே புதிய உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், கொரோனாவை தடுப்பு நடவடிக்கைகளில் ஒரு பகுதியாக, அதிநவீன வசதிகளுடன் கூடிய புதிய மருத்துவமனையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்துள்ளார். மேலும், நாட்டிலேயே முதல்முறையாக, கொரோனா அறிகுறியுடன் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருப்பவர்களுக்காக, ஒரு புதிய திட்டத்தையும் அவர் காணொளி காட்சியின் மூலம் அறிமுகப்படுத்தி வைத்தார்.

‘அம்மா கோவிட்-19 வீட்டுப் பராமரிப்பு திட்டம்’ என்னும் இந்தத் திட்டம், கொரோனா அறிகுறிகளுடன் வீட்டுத் தனிமையில் உள்ளவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. வீட்டுத் தனிமையில் இருப்பவர்களை கண்காணிப்பதற்காக, மருத்துவர்கள், செவிலியர்கள், மனநல ஆலோசகர்கள் என 20 பேர் கொண்ட மருத்துவக் குழுவினர் சுழற்சி முறையில் பணியாற்ற நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தேவையான மருத்தவ ஆலோசனைகளை இணையவழியில் வழங்கவும் ஏற்படு செய்யப்பட்டுள்ளது.

வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு தீவிர மருத்துவ சேவை தேவைப்படுபவர்களுக்காக, அவசர ஊர்திகளும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 13

0

0