கொரோனா அறிகுறி தென்பட்ட டெல்லி நபருக்கு நெகட்டிவ் : விரைவில் டிஸ்சார்ஜ்…?

25 March 2020, 9:48 pm
vijayabaskar-updatenews360
Quick Share

சென்னை : கொரோனா அறிகுறி தென்பட்ட நபருக்கு தற்போது நெகட்டிவ் ரிசல்ட் வந்துள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் இந்தியா உள்பட 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் பீதியை கிளப்பி வருகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது. தமிழகத்தில் ஒருவர் உள்பட இதுவரை இந்தியாவில் கொரோனாவுக்கு 11 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23 ஆக உள்ளது.

இந்த நிலையில், கொரோனா அறிகுறி தென்பட்ட நபருக்கு தற்போது நெகட்டிவ் ரிசல்ட் வந்துள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “தமிழகத்தில் 2-வது கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட டெல்லியைச் சேர்ந்த நபர், தற்போது ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பில் உள்ளார். அவருக்கு மேற்கொள்ளப்பட்ட இரு பரிசோதனைகளில் நெகட்டிவ் முடிவு கிடைத்துள்ளது. எனவே, இரு தினங்களில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படலாம்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.