எஸ்.பி.பி.யின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் : மருத்துவமனை புதிய அறிக்கை..!

28 August 2020, 6:49 pm
Quick Share

சென்னை : கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை மோசமடைந்ததால், தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அண்மையில் உடல்நிலை சீரான நிலையில், மீண்டும் பாதிப்பு ஏற்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.

விரைவில் எஸ்.பி. பாலசுப்ரமணயிம் குணமடைந்து வரவேண்டும் என திரையுலகத்தினர் மற்றும் அவரது ரசிகர்கள் என பல்வேறு தரப்பினர் கூட்டு பிரார்த்தனை நிகழ்த்தினர். இதைத்தொடர்ந்து, எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை தெரிவித்தது.

இந்த நிலையில், எஸ்.பி.பி.யின் உடல்நிலை குறித்த புதிய தகவலை எம்.ஜி.எம். மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதில், “பிரபல பாடகர் எஸ்.பி.பி.யின் உடல்நிலை சீராக உள்ளது. அவருக்கு தற்போதைய நிலைக்கு பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சையை ஏற்றுக் கொள்ளும் அளவிற்கு உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது,” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 46

0

0